Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி மாத பலன்: ரிஷப ராசிக்கு விபரீத ராஜயோகம்.. தங்க மழை பெய்யப் போகுது

Subscribe to Oneindia Tamil

January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. அற்புதமான யோகம் கிடைக்கும். பெர்டிலிட்டி நடத்துபவர்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். திட்டமிட்டு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். முகம் வசீகராகும். எல்லா காரியங்களும் வேகமாக நடக்கும். சுக்கிரன் 8 இல் அமர்ந்திருக்கிறார். புதன் சுக்கிரனைப் பார்ப்பதால் தன லாபம் கிடைக்கும்.

january-month-rasi-palan-january-month-predictions-for-rishabam-rasi-people

நல்ல லாபம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 2 இல் குரு இருப்பாதல் நல்ல லாபம் வருமானம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். திருமணம் தொடர்பான விஷயங்கள் கைகூடி வரும். அடுத்த மாநிலத்தில் சென்று தொழில் உத்தியோகம், வேலை செய்யும் அமைப்பு ஏற்படும். சனி லாபத்தில் இருப்பதால் மாணவர்கள் உயல்கல்வி படிக்கும் வாய்ப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவை உண்டாகும்.

தாயின் ஆரோக்கியம்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவார்கள். அக்கம்பக்கத்தினருடன் நல்ல உறவு, நட்பு ஏற்படும். பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். வெளியூர் செல்லும் யோகம் ஏற்படும். 4 இல் கேது இருக்கிறார். ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். தாயின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சூரியன் 8 ஆம் இடத்தில் செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால் வீடு மாற்றும் எண்ணம், அபார்ட்மென்டுக்கு குடிபெயரும் எண்ணம் ஏற்படும்.

தடை நீங்கும்

தாயின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். இளைய சகோதரருடன் கருத்து மாறுபாடு ஏற்படும். சூரியன் 8 ஆம் இடத்தில் அமருவதால் தந்தையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதன் பகவான் சாதகமாக இருப்பதால் கல்வியில் இருந்த தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும். செயற்கை முறை கருத்தரித்தல், கருத்தரிப்புக்கான சிகிச்சைகள் வெற்றி பெரும்.

பெண்கள்

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலகட்டம். எச்சரிக்கை தேவை. சமூக வலைதளப் பயன்பாடுகளில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர், வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும் யோகம் உண்டு. கண், சர்க்கரை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

தன வருமானம்

திடீர் தன வருமானம் ஏற்படும். ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. சனி பகவான் லாபத்தில் அமர்ந்திருப்பதால் உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். வேலை நெருக்கடி இருந்தாலும் முன்னேற்றம் ஏற்படும். குரு 2 ஆம் இடத்தில் இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில், தொழிலில் லாபம் ஏற்படும். குலதெய்வம் கோயில்களுக்குச் செல்லும்போது பார்த்து சென்று வருவது நல்லது. திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருப்பதால் திடீர் யோகம், வருமானம் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+