Viruchigam: விருச்சிக ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. ஜூன் மாதம் முதல் நீங்க தான் ராஜா
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும். ராசிநாதன் உச்சமடைகிறார். 15 ஆம் தேதி வரைக்கும் ராசிநாதன் 2 ஆம் இடத்தில் குருவின் பார்வையில் இருக்கிறார். அதற்குப் பிறகு 3 ஆம் இடத்தில் சுக்கிரனுடன் வலிமையாக இருக்கிறார். கெளரம், அந்தஸ்து உயரும் அமைப்பு உள்ளது. கெட்ட பெயராகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். தவறாக நடந்து கொண்டு விட்டோமே என்று குற்றவுணர்வுடன் இருந்தவர்கள் அந்த பெயரிலிருந்து மீட்டெடுக்கும் விதமான வாய்ப்புகள் கிடைக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும்.
தொழில்
ராசிநாதன் முழுமையாக சுபத்துவமாக இருக்கிறார். மஞ்சள் நிறம் சார்ந்த தொழில் அமைப்புகளைக் கொண்டவர்கள், மருத்துவத் துறையில் இருப்பவர்கள், சிவப்பு நிறம் சார்ந்த தொழில் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு அற்புதமாக இருக்கும். மாதத்தின் முதல் அமைப்பில் நிறைய பயணங்கள் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
அச்சாரம்
நிறைய செலவுகள் இருந்தாலும், குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். அம்மா, அப்பாவின் மீது கோபமாக இருந்தவர்கள், காதல், தொழில் தொடர்பான விஷயங்களில் அவர்கள் மேல் கோபமாக இருக்கும் தன்மைகள் அனைத்தும் மாறும். தாய், தந்தையினுடைய மனமாற்றங்கள் கிடைக்கும். அடுத்த மூன்று மாதத்தில் நீங்கள் நல்ல மாற்றங்களைக் காண வேண்டும் என்பதால் அதற்கான அச்சாரத்தை இப்போதே போடுவீர்கள்.
சங்கடங்கள் நீங்கும்
சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வரும். காவல் நிலையம், கோர்ட், கேஸ் என்று அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். 5 ஆம் இடத்தில் சனி இருப்பதால் பெண் குழந்தைகள் மீதான கவலைகள் அதிகரிக்கும். குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த சிறு சிறு மன சங்கடங்கள் ஜனவரி மாதத்திற்குப் பிறகு நீங்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளும் மீனம் ராசி.. ஆபத்தும் காத்திருக்கு கவனம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications