Rasi Palan This Week: கடக ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு அநீதி செய்பவர்கள், அவமானப்படுத்தி இருந்தால் அவர்களிடம் நியாயம் கேட்பதற்கான சரியான காலகட்டமாக இருக்கும். கணவனாக இருந்தால் மனைவியின் மூலமாகவும், மனைவியாக இருந்தால் கணவர் மூலமாக சண்டை போடுவதற்கான வாய்ப்புள்ளது. அவர்களுடைய வீட்டார்கள் மூலமாக சண்டை போடுவதற்கான வாய்ப்புள்ளது.
ரொம்ப கவனம்
ஒரு சில பேருக்கு பிரிவு, நோட்டீஸ், கேஸ் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. கணவருக்கு வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைத்து வெறொரு ஊருக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். 100 சதவீதம் புதிய ஒரு கடன் கிடைக்கும். நிறைய பேருக்கு நிலம் வாங்கக்கூடிய யோகம் உண்டு. சந்தோஷம் அதிகரிக்கும். பெண்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும்.
வங்கிகளில் கடன்
இந்த வாரத்தில் புதிய வேலைகள், வங்கிகளில் கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தை பிள்ளை உறவுகளில் சிறிய கருத்து வேறுபாடுகள் காணப்படும். புதிய நண்பர்கள், அரசியலில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். குடும்பம், உத்தியோகத்தில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. பொறுமை மற்றும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
தேவையில்லாத மன அமைதிகள், மனக் கசப்புகள், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வாரம் சிறிது கவனமாக இருப்பது நல்லது. சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 70 சதவீதம் நன்றாக இருக்கும். கரிவரதராஜப் பெருமாள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். கோயில்களுக்கு உழவாரப் பணிகளைச் செய்து கொடுப்பது நன்மையைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications