Rasi Palan This Week: கன்னி ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்.. வீடு வாங்குவது கன்ஃபார்ம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த ஆண் பிள்ளைகளுக்கு காய்ச்சல் வரும். சிலருக்கு சிறிய அறுவை சிகிச்சைகள் செய்வதற்கான சூழல் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. நிறைய பேருக்கு நிலம் வாங்கும் யோகம் உண்டு. வீடு வாங்குவது, பூர்வீக சொத்துகள் கைக்கு கிடைக்கும் யோகம் உண்டாகும். மிகப்பெரிய நம்பிக்கைகள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் அனுகூலங்கள் ஏற்படும்.
வீட்டுக் கடன்
மனக் கசப்புகள் நீங்கும். எந்த விஷயமாக பார்த்துக் கொள்ளலாம் என்கிற நிலை ஏற்படும். விளையாட்டுத் துறை, அரசியலில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நீங்களே வேண்டாம் என்று சொன்னாலும் ஆதிக்க மனப்பான்மையுடன் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வீட்டுக்கான கடன் கிடைக்கும். நிலத்துக்கான கடன், படிப்பிற்கான கடன் கிடைக்கும்.
சுபகாரியம்
உங்களுக்கு கிரகங்கள் பூர்வ புண்ணிய அனுக்கிரகங்களை கொடுக்கும். திடீரென சுபச் செய்திகள் வீடு தேடி வரும். அன்பு மகனுடன் திடீரென நெருக்கம் ஏற்படும். சுபகாரியம் நடத்துவதற்கு திட்டமிடுவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்வீர்கள். நல்ல நண்பர்களை விட்டுவிடாமல் இருப்பது நன்மை.
உறவுகள் முக்கியம்
உங்களுடன் நெருக்கமாக இருக்கும் உறவுகளையும், நட்புகளையும் விட்டுக் கொடுத்துவிடாமல் இருப்பது நல்லது. பொருளாதாரம் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். நல்லவை நடக்கக்கூடிய வாரமாக இந்த வாரம் அமையும்
ஆரோக்கியம்
கன்னி ராசியினருக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய மாதமாக இருக்கும். முடிவுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஆண்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் ஏற்றத்தைப் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications