Rasi Palan This Week: கன்னி ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. பணவரவு கொட்டப் போகுது
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். ரத்தபந்த உறவுகள், உறவினர்கள் ஆரோக்கியத்தில் அதீத கவனமாக இருப்பது நல்லது. வீடு மாற்றம், மனை மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் என ஜூன் மாதத்திற்கு முன்பு என்ன விதமான மாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது.
பணவரவு
நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் நம்பிக்கை, ஏற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம், லாட்டரி போன்றவை அடிக்கும் யோகம் ஏற்படும். தொழிலில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். சந்தஷோமும், ஆனந்தமும் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். அலர்ஜி, சளி தொடர்பான விஷயங்கள், சைனஸ், ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
தைரியம் கூடும்
தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உங்களுடைய செல்வாக்குகள் கூடும். தியானம் செய்து மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்வீர்கள். வெற்றி உங்களுக்கு கைகூடி வரும். லாபம், அனுகூலம், பணத் தட்டுப்பாடு தீரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
லாபம் கொட்டும்
லாபம், அனுகூலம் ஏற்படும். பணத் தட்டுப்பாடுகள் நீங்கும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வரும் யோகம் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு, விநாயகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும்.
பரிகாரம்
சிவன் கோயில், பெருமாள் கோயில்களுக்கு கைங்கரியம் செய்வது நன்மையை ஏற்படுத்தும். நவக்கிரகத்தில் உள்ள குரு வழிபாடு யோக பலத்தை அதிகளவில் பெற்றுத் தரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications