Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rasi Palan This Week: பட்டையைக் கிளப்பும் கும்ப ராசிக்கு.. லாபம், சந்தோஷம்.. ஒரே குஷிதான்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kumbam-rasi-palan-what-kind-of-benefits-that-kumbam-aquarius-will-get-from-january-5-to-11

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு லாபம், சந்தோஷம் அதிகரிக்கும். உறவு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கும். கும்ப ராசியினர் இருக்கும் வீட்டில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும். தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் எல்லாம் இனி நடக்கும். இழுபறியாக இருந்த விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

புதிய பொறுப்புகள்

அரசு கெளரவங்கள் ஏற்படும். புதிய பொறுப்புகளுக்கு வரக்கூடிய பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் தெரியாதவர்கள் கூட உங்களுக்கு வந்து உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிறுநீர் தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் கூட பெரிதாகும் வாய்ப்புள்ளதால் அதீத கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் நீங்கள் திடீரென எடுக்கும் முடிவுகள் அற்புதத்தை ஏற்படுத்தும்.

கவனம்

வளர்ப்பு பிராணிகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும்.

வழிபாடு

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதைக் கடைப்பிடிப்பது நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். தொழில் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். கும்ப ராசியினருக்கு நரசிம்மர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, துர்க்கை வழிபாடு உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். கோளர் பதிகத்தை சொல்வது, கேட்பது நன்மை பயக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+