மகர ராசிக்கு தொழிலில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேலதிகாரிகளிடம் மட்டும் கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். சுப விரய பிராப்தம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். சந்தோஷமான செலவுகளைத் செய்து மகிழ்வீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அனுகூலம் ஏற்படும்.
செல்வாக்கு
மேலதிகாரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக செல்ல வேண்டும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் செல்வாக்குகள் கூடும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது. மேலதிகாரிகளிடம் கோபதாபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
தொழிலில் லாபம்
அஷ்டமத்தில் கேது இருப்பதால் மனஅழுத்தம், மன குழப்பம், இனம் புரியாத பயம் ஏற்படும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. வயிறு, கழிவு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கொட்டும் காலகட்டமாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளை செய்யத் தொடங்குவீர்கள். சொன்ன காரியங்களை செய்து முடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்திலும் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக எடுக்கக்கூடிய அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். நரம்பு, மனஅழுத்தம், குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். விநாயகர் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications