Rasi Palan This Week: கொடிகட்டி பறக்கப் போகும் மீனம் ராசி.. சொந்த வீடு வாங்கும் யோகம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு கொடி கட்டிப் பறக்கும் யோகம் உண்டாகும். லாபங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். நல்ல திருப்தி உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பதவிகள் வரும் நல்ல காலகட்டம். தெய்வ அனுக்கிரகங்கள் கிடைக்கும்.
வீடு வாங்கும் யோகம்
வீடு வாங்கி கிரகப்பிரவேஷம் செய்வீர்கள். சிலருக்கு ராஜ பதவிகள் கிடைக்கும். பெரிய பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு மூலமாக ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெரிய வெற்றியைப் பார்க்கும் காலகட்டமாக இருக்கும். எல்லோருமே உங்களுக்கு நண்பர்களாக மாறுவார்கள். மூத்த அண்ணன், அக்காக்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் வேலையைப் பார்ப்பது பெரிய ஏற்றத்தைத் தரும்.
வழிபாடு
விநாயகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். பாரம்பரிய நோய் பிரச்சனைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய தொழில் தடை, உத்தியோகத் தடை, படிப்பு தடைகள் என அனைத்து விதமான தடைகளும் நீங்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிக அனுகூலங்கள் கிடைக்கும்.
நம்பிக்கை
யோக பலத்தை அதிகம் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், நம்பிக்கைக்கான நல்ல நேரம். தொடர்ந்து இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். ஜென்ம சனி இருப்பதால் உடற்பயிற்சியைத் தவறாமல் கடைப்பிடிப்பது நல்லது. அடிவயிறு முதல் பாதம் வரையிலான அனைத்து விஷயங்களிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அற்புதமான காலகட்டம்
உங்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கும். பேராசிரியர்கள், துணை வேந்தர்கள், பல்கலைக் கழகத்தில் வேலை செய்பவர்களுக்கு என அனைவருக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். தைரியமான நிறைய விஷயங்களை செய்து முடிப்பீர்கள். சந்தோஷம், பொருளாதாரம் இந்த இரண்டுமே உங்களுக்கு 100க்கு 100 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications