Rasi Palan This Week: அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. மேஷம் ராசிக்கு அரசு வேலை கன்ஃபார்ம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த பஞ்சாயத்துகள் எல்லாமே முடியும். மனதில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். போராட்ட குணங்கள் அகலும். வண்டி, வாகனங்களினால் வரும் விபத்துகள் தவிர்க்கப்படும். வீட்டில் பெரியவர்கள் உங்களுக்கு எதிராக இருந்து வந்த நிலைமைகள் எல்லாம் மாறும். உங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள்.
அரசு வேலை
15 ஆம் தேதி வரைக்கும் அடிவயிறு, வயிறு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். எந்த விஷயத்தை தொடங்கினாலும் சங்கடங்கள் ஏற்படும். 10 ஆம் இடத்தில் செவ்வாய் எனும் ராஜகிரகம் தன்னுடைய வீட்டில் வந்து உச்சமடையும் போது வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இனி வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும். அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
ஆரோக்கியம்
மருத்துவத் துறையில் புரட்சி செய்து சாதிக்கக்கூடிய நிலைமை ஏற்படும். சண்டை போட்டு சில காரியங்களை செய்ய வேண்டியிருந்தாலும் அதில் நீங்கள் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சிறிய சிறிய அறுவை சிகிச்சைகள், அடிவயிறு உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
உங்களுக்கு எதிரான நிலைமைகள் எல்லாம் மாறும் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார்தில் ஏற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். வைத்தியநாத சுவாமி வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் அற்புதமாக இருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications