Rasi Palan This Week: ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் எப்படி.. நல்ல பலன்கள் கிடைக்குமா?
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனியின் வீட்டில் இருப்பதால் ஒரு சிலருக்கு இடம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
குடும்பம்
குடும்பத்தில் அந்நியோன்யத்தைக் கெடுக்கும்படியான சில செயல்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமான கிரகங்களான செவ்வாய், சூரியன், சுக்கிரன் இணைவதால் நல்ல பலன்களைக் கொடுக்காது. தந்தைக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு, மன வருத்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வெளியில் செல்லும்போதெல்லாம் பட்டீஸ்வர சுவாமியை வழிபாடு செய்துவிட்டுச் செல்வது நன்மை பயக்கும்.
குருவின் அருள்
புதிய வேலைகள் கிடைக்கும் யோகம் உண்டு. குரு பகவானின் அருள் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையேயான சண்டை சச்சரவுகள் நீங்கும். 2 இல் குரு இருப்பதால் பிள்ளைகளால் நிம்மதி ஏற்படும். வாலிப பருவத்தில் இருக்கும் பிள்ளைகளால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசுவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகளை அரவணத்துச் செல்வது நல்லது. விற்காத சொத்துகளை விற்கும் யோகம் ஏற்படும்.
சொத்துகள் கிடைக்கும்
சகோதரர்களுக்கு இடையே இருந்த சொத்து பிரச்சனைகள் நீங்கும். புதிய சொத்துகளை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கும். சுவாமியை வழிபட்டுவிட்டு வெளியே செல்வது பெரிய ஏற்றமும், சந்தோஷத்தையும் கொடுக்கும். இல்லையெனில் நிறைய மன வேதனையை பார்க்கக்கூடிய நேரமாக இருக்கும். இத்தனை பாதிப்புகள் இருந்தாலும் உங்களுக்கு நன்மைகளே நிறைய நடக்கும். சந்தோஷம், 70 சதவீதமும், பொருளாதாரம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். பட்டீஸ்வர சுவாமி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications