Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. தொழில், வேலையில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அதீத கவனம் தேவை. 16 ஆம் தேதி வரை தேவையில்லாத பதட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் கவனம் வேண்டும். தொழில், மேலதிகாரிகள் விஷயம், உடனிருப்பவர்கள் விஷயம், அக்கம்பக்கத்தினர் என எல்லா விஷயத்திலும் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ராஜினாமா செய்கிறேன் என்று உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.
செல்வாக்கு கூடும்
பெரிய பலம், மதிப்பு, மரியாதை உண்டாகும். சமூகத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், யோகமும் பெருகும். சூரியனால் யோகம் தடைபடும் வாய்ப்புள்ளதால் அனுமன், தாயார், பெருமாளை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.
தடைகள் நீங்கும்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் விரைவிலேயே அந்த தடைகள் அனைத்தும் மாறும். மார்கழி மாதம் முடிவடைந்தவுடன் தடைகள் அனைத்தும் நீங்கும். தனிப்பட்ட முறையில் எல்லா விஷயங்களிலும் சாதிக்கும் யோகம் உண்டாகும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்களில் ஏற்றம் ஏற்படும்.
ஆதாயம்
வேற்றுமொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும். புதிய வியாபாரம், தொழிலில் கட்டமைப்பு ஏற்படும். அரசு, அரசியல் துறையில் அதீத ஏற்றம் ஏற்படும். தொட்டது துலங்கும் யோகம் உள்ளது. இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பெரும் நம்பிக்கையைப் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.
முயற்சிகளில் வெற்றி
கையெழுத்திடுவதற்கு முன்பு படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போடுவது நல்லது. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சேமிப்புகளை செய்யத் தொடங்குவீர்கள்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications