Rasi Palan This Week: சிம்ம ராசியினரின் சொந்த வீடு கனவு நனவாகப் போகுது.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு 6 ஆம் இடத்தில் அனைத்து கிரகங்களும் சேர்ந்திருப்பது உங்களுக்கு லாபத்தைக் கொடுக்கும். வெற்றி பெறும் ஸ்தானங்ள் மிக அதிகமாக உள்ளது. நீதிமன்றம், கேஸ், வம்பு, வழக்கு, சண்டை, சச்சரவுகள், கூட இருப்பவர்களின் பிரச்சனை, அலுவலகப் பிரச்சனை, கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலைமைகள் போன்ற அனைத்து பாதிப்புகளும் நீங்கி உங்களுக்கு சாதகமான நிலைமை ஏற்படும்.
சொந்த வீடு அமையும்
திருமண வாழ்க்கை அமையும். சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் ஏற்படும். இருக்கும் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். 6 ஆம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் மிக வலிமையாக உள்ளது. எதிரிகளை வெல்லக்கூடிய ஸ்தானமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். உஷ்ணம், அல்சர் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை. பெரிய பாதிப்புகளை ஏற்படாது என்றாலும் கவனம் தேவை.
புதிய வேலை
ராசியில் கேது இருப்பது விசேஷத்தை தரும். உங்களுடைய நண்பர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும. படிப்பில் இருந்த தடை நீங்கும். பிள்ளைகள் சொல் படி நீங்கள் நடப்பது, அல்லது நீங்கள் சொல்லும்படி பிள்ளைகள் நடப்பார்கள். வேலை பார்க்கும் இடத்தில் சில நெருக்கடிகள் இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வழிபாடு
சுப்பிரமணியர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். மாணவர்களுக்கு கவனம் சிதறுவதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 70 சதவீதம் ஏற்றத்தைப் பெறுவீர்கள்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications