Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rasi Palan This Week: அடித்தாடும் துலாம் ராசி.. தடைபட்ட விஷயங்கள் எல்லாம் இனி நடக்கும் காலம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Thulam Lucky zodiac signs

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம்
ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லா நல்ல விஷயங்களும் அடுத்தடுத்து நடக்கும் காலகட்டம். தெய்வ வழிபாடுகள், பிரார்த்தனைகள், தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். இழுபறியாக இருந்த விஷயங்களில் எல்லாம் இனி வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். வங்கியில் கடன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்தவர்களை சந்திக்கும் யோகம் ஏற்படும்.

மன வருத்தம் தீரும்

பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த மன வருத்தங்கள் தீரும். துணை விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். உங்களை எல்லோரும் கைவிட்டு விட்டதாக நினைக்காமல் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவது பேசுவது நல்லது. கஷ்டத்தில் தோல் கொடுத்தவரிடம் இணக்கமாக இருக்க வேண்டும். 27 ஆம் தேதி வரை சனி பகவான் அருமையான நிலையில் இருப்பதால் அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.

வெற்றி மேல் வெற்றி

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எல்லா விஷயங்களையும் செய்வது நல்லது. வியாபாரம், தொழிலில் நல்ல ஏற்றமும், லாபமும் உண்டாகும். கடன்கள் கிடைக்கும். ஏற்றம் பெறும் காலகட்டம்.

வழிபாடு

தினந்தோறும் உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பாதிப்புகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. நரசிம்மர் கவசத்தைக் கேட்பது, நரசிம்மர், முருகர், துர்க்கையை தவறாமல் வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தைப் படிப்பது நன்மையைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+