Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rasi Palan This Week: கிங்காக மாறும் விருச்சிக ராசி.. குரு, புதனின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

viruchigam-rasi-palan-what-kind-of-benefits-that-viruchigam-signs-will-get-from-january-11-to-17

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.

அந்த வகையில், ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு ராசியாதிபதி 3 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். சூரியன் சுக்கிரனுடன சேர்ந்திருக்கிறார். இந்த வாரத்தின் இறுதி பகுதியில் புதன் சேருவதால் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். பல தாக்கங்கள் நிவர்த்தியாகும். மன வலிமை அதிகரிக்கும். கொண்டாட்டமான காலகட்டமாக இருக்கும்.

நண்பர்கள்

நண்பர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மீண்டும் நண்பர்களுடன் சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் இருக்கும் பங்குதாரர்கள், பார்ட்னர்கள் போன்றோருடன் இருந்து வந்த பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். நிறைய பஞ்சாயத்துகள் முடியும். நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் கையெழுத்து போட்டு கைக்கு வரும்.

வாய்ப்புகள் தேடி வரும்

பெரிய பெரிய வாய்ப்புகள் வரும். நிலம் விற்கும் யோகம் உண்டு. பண வரவு அற்புதமாக இருக்கும். பேச்சுத் திறமை நன்றாக இருக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குரு வீட்டில் புதன் அமருவதால் இந்த மாதம் முழுவதும் சூப்பராக இருக்கும். சிஸ்டம், ஐடி, சாஃப்ட்வேர், ஆர்க்கிடெக்சர், ரியல் எஸ்டேட், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். நிறைய ஏற்றங்கள் கிடைக்கும்.

மன தைரியம்

அரசு தொடர்பான விஷயங்களில் நிறைய சாதகமான சூழ்நிலை ஏற்படும். வெளியூர் பயணம் செய்யும்போது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. நகைகள், பணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. பணம், நகையை இழக்கும் வாய்ப்புள்ளது. உடல்நலனில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். தன ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்துக்கு கிரகங்கள் செல்வதால் மன தைரியம் அதிகரிக்கும்.

பதவி கிடைக்கும்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். பழைய சொத்து ஒன்றை விற்கக்கூடிய யோகம் உண்டாகும். பிள்ளைகளுக்கு உதவி செய்வீர்கள். நிறைய பணச் செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் பதவி, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்வது நல்லது.

வழிபாடு

மிருத்யுங் ஜெய ஜெபம், ஹோமம், வழிபாடு செய்வது முன்னேற்றத்தையும், மாற்றத்தையும் கொடுக்கும். இளைய சகோதரன், சகோதரிகள் கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீதமும் ஏற்றம் பெறுவீர்கள். அற்புதமான வாரமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+