மகனுக்கு இந்த தீர்ப்பை சமர்ப்பிக்கிறேன்! தப்பு பண்ண மாதம்பட்டி ரங்கராஜ் ஓட முடியாது: ஜாய் கிரிசில்டா
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என்றும், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதனை ஹைகோர்ட் இன்று டிஸ்மிஸ் செய்துவிட்டது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, தன்னை திருமணம் செய்து உடன் வாழ்வதாக கூறி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியதாக போலீஸில் புகார் அளித்ததுடன், இது குறித்து சமூக வலைதளங்களிலும் பேட்டி அளித்திருந்தார்.

அத்துடன் மாதம்பட்டியுடன் இணைந்து எடுத்து கொள்ளப்பட்ட போட்டோக்கள், வீடியோக்களையும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து வந்தார்.. இதனால் தனது நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, ரங்கராஜ் நீதிமன்றத்தை நாடினார்.
ஜாய் கிரிசில்டா
விசாரணையின் போது, ஜாய் கிரிசில்டா தரப்பில், விவாகரத்து செய்துவிட்டதாக சொல்லி, ரங்கராஜ் திருமணம் செய்ததாகவும், பிறகு தன்னை ஏமாற்றியதாகவும் வாதிடப்பட்டது. மேலும், புகார் அளித்தபோது போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும், கர்ப்பிணியாக இருந்த நிலையில் காவல் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஜாய் தரப்பில் கூறப்பட்டது.
பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வாதிடும்போது, ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யத் தயாராக இருப்பதாகவும், தந்தை என உறுதி செய்யப்பட்டால் குழந்தையின் பொறுப்பை முழுமையாக ஏற்க தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் அவதூறான வீடியோக்கள் பரப்பப்படுவதாகவும், சில யூடியூப் சேனல்கள் இதன் மூலம் பணமாக்கி வருவதாகவும் கூறி, அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.. இந்நிலையில், இன்று தீர்ப்பை வழங்கி, மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தீர்ப்பு வெளியானதுமே ஜாய், செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, இன்று எனக்கு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. எனக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு தொடுத்திருந்தார்.. இன்ஸ்டாகிராமில் அவரை பற்றின வீடியோக்களை நான் டெலிட் செய்ய வேண்டும், சோஷியல் மீடியாவில் அவரை பற்றி எதுவும் பதிவிடக்கூடாது என்று வழக்கு தொடுத்தார்..
குழந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்
இந்த மனுவை இன்று நீதிபதி தள்ளுபடி செய்தார்.. நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.. எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று ஏற்கனவே நான் அதிக நம்பிக்கையில்தான் இருந்தேன்.. தாமதத்தாலும்கூட, உரிய நீதி எனக்கு கிடைத்து விடும் என்பதில் நிறைய நம்பிக்கை இருந்தது..
தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.. இப்போதும் நான் நீதிமன்றத்தை அதிகம் நம்பி உள்ளேன்.. தவறு செய்தவர்கள் கண்டிப்பா அனுபவித்தே ஆகணும்.. இன்று எனக்கு கிடைத்துள்ள இந்த தீர்ப்பை என்னுடைய குழந்தை ராகா ரங்கராஜுக்காக சமர்ப்பிக்கிறேன்..
பயந்து ஓடும் மாதம்பட்டி ரங்கராஜ்
அவர்தான் டிஎன்ஏ கேட்டாரு.. டிஎன்ஏ டெஸ்ட் பற்றி பேசி 2 மாதமாகிவிட்டது.. ஆனால் இதுவரை மௌனமாவே இருக்கிறார். பயந்து ஓடுகிறார் என்றே அர்த்தம்.. எதற்காக பயந்து ஓடுகிறார் என்று அவருக்கே தெரியும்.. தப்பு செய்துவிட்டு எங்கேயும் ஓடி ஒளிய முடியாது..
இதுவரை அதுதொடர்பான விளக்கத்தை நிரூபணத்தை அவர் தரவில்லை.. இதிலிருந்தே அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.. எந்த வாயால் டிஎன்ஏ டெஸ்ட் கேட்டாரோ, டிஎன்ஏ தொடர்பான தீர்ப்பும் வெளிவந்து, பொதுவெளியில் அனைத்தும் அம்பலமாகும்.. அந்த தீர்ப்பும் என் குழந்தைக்கு நீதியை பெற்றுத்தரும்" என்று தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications