Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் "திமுக வெற்றி கொண்டான்" வைப்ரேஷன்.. கொட்டப்பட்ட பணம்.. இன்னும் சென்சார் கிடைக்காத மர்மம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் U/A கிடைத்துவிடும் என்றார்கள்.. ஆனால் இதுவரை சென்சார் கிடைக்கவில்லை.. இதற்கான மர்மமும் தெரியவில்லை.. வெளிநாடுகளில் சென்சார் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கும் மர்மம் ஏன் என்று தெரியவில்லை. அதை எப்படி இவர்கள் கையாள போகிறார்கள் என்றும் தெரியவில்லை" என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "ஜன நாயகன் கமர்ஷியல் படத்துக்குரிய டிரைலராக வந்துள்ளது. படம் எப்போது வரும் என்ற ஆர்வத்தை இது தூண்டி உள்ளது.. எளிதில் யூகிக்கக்கூடிய கதைதான், அதில் விஜய் நடிப்பு எப்படி உள்ளது? என்பதைதான் பார்க்க வேண்டி உள்ளது..

Jana nayagan Vetrikondan Vijay

வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குநர்கள் வன்முறையைத் தூண்டும் விதமாகப் படம் எடுப்பதாக விமர்சனங்கள் சமீபகாலமாக உள்ள நிலையில், இந்தப் படத்தில் விஜய் ரத்தத்தைச் சுவைத்தபடி வரும் காட்சி அத்தகைய விமர்சனங்களை ஈர்க்கக்கூடும்..

100 சதவீதம் திருப்தியான டிரைலர்

100 சதவீதம் திருப்தியான டிரைலர் இது.. இந்தப் படம் தெலுங்குத் படமான 'பகவந்த் கேசரி'யின் ரீமேக் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.. படத்தின் பெயர், விஜய்யின் அரசியல் கட்சி (TVK) மற்றும் 'தளபதி வெற்றி கொண்டான்' போன்ற பெயர்கள் அரசியல் குறியீடுகளாகக் கையாளப்பட்டுள்ளன. '

வெற்றி கொண்டான்' என்பது திமுக-வின் முக்கியப் பேச்சாளர் ஒருவரின் பெயர்.. திமுகவை பெரிய எதிரியாக நினைக்கும் விஜய், வெற்றிக்கொண்டான் பெயரை வைத்துள்ளது, ஆச்சரியமாக உள்ளது..

படத்தில் வசனங்கள் மிகவும் கூர்மையாகவும், 'பொறி பறக்கும்' வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. தெலுங்கு மூலப் படத்தில் பாலையா நடித்தது போன்றே விஜய்யின் சண்டைக் காட்சிகளும் ஆக்ஷன் பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும். விஜய் அரசியலுக்கு வர முடிவெடுத்த பிறகு, கடந்த சில படங்களாகவே தனது படங்களில் அரசியல் கருத்துக்களை வைக்கத் தவறுவதில்லை.. அப்படித்தான் இந்த படத்திலும் பல இடங்களில் பன்ச் பன்ச்சாக வைக்கப்பட்டுள்ளது..

அரசியல்வாதிகளுக்கு சாட்டை அடி

டிரைலரின் இறுதியில் விஜய் சாட்டையை எடுத்து 20 முதல் 30 அரசியல்வாதிகளை அடிக்கும் காட்சி தியேட்டரில் பயங்கர கைதட்டலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"நான் ஆணையிட்டால்" என்ற எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடல் இந்தப் படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கவும் சொல்கிறார்கள்.. "மக்களுக்கு நல்லது பண்ண வராத, திரும்பிப் போயிரு" என்று ஒரு கேரக்டர் சொல்ல, அதற்கு விஜய் நக்கலாக பேசாமலேயே பதில் சொல்கிறார்.. அவர் அரசியலுக்கு வருவதையே இந்த வசனமெல்லாம் குறிக்கிறது.

தேர்தல் நேர வெளியீடு

இந்த படத்தை தள்ளி போட்டதற்கு காரணமும் தேர்தல்தான்.. வரும் தேர்தலை மனதில் வைத்தே இந்தப் படம் ஜனவரியில் வெளியாகிறது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வரும்போது, இந்தப் படத்தின் வசனங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்..

டிரைலரின் ஓபனிங் டயலாக்கே 'சண்டைக்கோழி' படத்தின் இடைவேளைக் காட்சியை நினைவுபடுத்துகிறது.. ஏற்கனவே கேட்ட வசனமாக இருந்தாலும், அதை விஷால் சொல்வதற்கும் விஜய் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.. விஜய் பேசும் டயலாக்கின் 'வைப்ரேஷன்' வேறு மாதிரியாக இருக்கும்.. வில்லனாக நடித்துள்ள பாபி தியோல் ஸ்கிரீனில் பிரம்மாண்டமாகத் தெரிகிறது, விஜய்யுடன் அவர் மோதும் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளது..

பணத்தை கொட்டி உள்ளனர்

ஷூட்டிங்கில் பாபு தியோல், விஜய்க்கு இருக்கும் மக்கள் கூட்டத்தையும் தமிழ்நாட்டு அரசியலையும் பார்த்து வியந்து விஜய்யுடன் பல விஷயங்களை விவாதித்தாராம்.. படத்தின் தயாரிப்பாளர் கே.டி.வி பணத்தை கணக்கு பார்க்காமல் கொட்டியிருக்கிறார்கள்.. இதனால் ஒவ்வொரு ஃபிரேமும் ரிச்சாக இருக்கிறது. டைரக்டர் எச். வினோத், இது விஜய்க்கான மாஸ், டான்ஸ் மற்றும் எமோஷன் நிறைந்த படமாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

படம் சுமார் மூன்று மணி நேரம் இருப்பதால், பிரத்யேகமாக டிரிபியூட் பாட்டு இல்லை என்கிறார்கள்.. அப்படி வைத்தால் ஒருநாளைக்கு 5 ஷோ ஓட்டும் தியேட்டர்காரர்களுக்கும் எரிச்சலாக இருக்கும்.. அதனால் அந்த பாட்டை தனியாக 15 நிமிடத்துக்கு எடுத்து வைத்துவிட்டார்களாம்.. ஒருவேளை தேர்தல் நேரத்தில் அதை தனியாக வெளியிடவும் வாய்ப்புள்ளது..

புஸ்சி ஆனந்த் மற்றும் அருண்ராஜ் ஐஆர்எஸ் போன்றவர்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள்... கட்சிக்காரர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் விஜய்யின் புதிய முயற்சி பாராட்டத்தக்கது..

சென்சார் ஏன் கிடைக்கல

படத்திற்கு சென்சார் சான்றிதழ் U/A கிடைத்துவிடும் என்றார்கள்.. ஆனால் இதுவரை சென்சார் கிடைக்கவில்லை.. இதற்கான மர்மமும் தெரியவில்லை..

வெளிநாடுகளில் சென்சார் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்த மர்மம், திட்டம் என்னவென்று தெரியவில்லை.. அதை எப்படி இவர்கள் கையாள போகிறார்கள் என்றும் தெரியவில்லை" என்றெல்லாம் பேசி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+