Parasakthi First Day Box Office: பராசக்தி முதல் நாள் வசூல் இத்தனை கோடி! சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சி தான்
சென்னை: (Parasakthi Collection) நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சென்சார் குழு கூறிய திருத்தங்களுடன் படம் ரிலீஸாகியிருந்தாலும், வெளிநாடுகளில் அன்-கட் வெர்ஷனாக வெளியான இந்த படத்துக்கு முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சிவகார்த்திகேயனுக்கு இது 25ஆவது திரைப்படம் என்பதால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல், அமரன், மதராஸி படங்களுக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடித்துள்ள சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் தோன்றியிருக்கிறார் என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பராசக்தி படத்தின் கதை
இந்த படம் 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டங்களை மையமாக கொண்டு நகர்கிறது. ஒரு அமைதியான அரசு ஊழியராக வாழ்க்கையை தொடங்கும் சிவகார்த்திகேயன், சூழ்நிலைகளால் சமூக போராட்டத்தில் குதித்து, எழுச்சிமிக்க போராளியாக மாறும் பயணமே படத்தின் மையம்.
மாணவர்களின் போராட்டத்தை அடக்குவதற்காக அரசின் உத்தரவுகளை நிறைவேற்றும் கொடூரமான போலீஸ் அதிகாரியாக ரவி மோகன் நடித்திருக்கிறார். இவர்களுக்கிடையிலான மோதல்கள்தான் படத்தின் திரைக்கதைக்கு வேகத்தையும் அழுத்தத்தையும் தருகிறது.
நடிப்பில் யார் ஸ்கோர்
படத்தின் மிகப்பெரிய பலமாக சிவகார்த்திகேயன் - ரவி மோகன் கூட்டணியே பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் அமைதியான மனிதனாகவும், பின்னர் போராட்டக்காரராகவும் மாறும் காட்சிகளில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே நேரத்தில், ரவி மோகன் இதுவரை நடித்த ஹீரோ இமேஜ்களை உடைத்து, வில்லனாக மிரட்டி இருக்கிறார்.
ரசிகர்கள் பலரும் "இந்த படத்தில் ஹீரோ - வில்லன் இருவரும் சம பலத்தில் நிற்கிறார்கள்" என பாராட்டி வருகின்றனர். அதர்வாவும் தன்னுடைய கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஸ்ரீலீலா, தமிழில் முதல் படத்திலேயே தனது சொந்த குரலில் பேசி கவனம் ஈர்த்திருக்கிறார்.
சென்சார் கட்டுகளுக்கு நடுவிலும் கொண்டாட்டம்
இந்தியாவில் வெளியான பதிப்பில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருந்தாலும், ரசிகர்களின் உற்சாகத்திற்கு அதெல்லாம் தடையாக இருக்கவில்லை. பல இடங்களில் மியூட் செய்யப்பட்ட வசனங்களை ரசிகர்களே திரையரங்குகளில் நிரப்பிக் கொள்வதாக சொல்லப்படுகிறது.
மேலும், விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகாததால், பராசக்தி படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி முதல் நாள் வசூல்
படத்தின் விமர்சனங்கள் பெரும்பாலும் பாசிட்டிவாக இருந்த நிலையில், Parasakthi First Day Box Office முதல் நாள் வசூல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பராசக்தி திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 11.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
“ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும்” – செகண்ட் ஹாஃப்பில் இருக்கும் சம்பவம்.. கெனிஷா இப்படி சொல்லிட்டாங்களே
அமரன் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து நல்ல பிரபலம் கிடைத்துவருவதால், வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.
உணர்வுப்பூர்வமான கதையை, போரடிக்காமல் சினிமா மொழியில் சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் சுதா கொங்கரா. சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படமாக பராசக்தி அவரது கேரியரில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது. முதல் நாள் வசூலும், ரசிகர்களின் ஆதரவும் பார்க்கும்போது, பராசக்தி பொங்கல் நாட்களில் தொடர்ந்து திரையரங்குகளை நிரப்பும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications