தலைவரை இயக்கும் டான்.. ரஜினியின் 173 ஆவது படத்தை இயக்கும் சிவகார்த்திகேயன் இயக்குநர்.. டபுள் ட்ரீட்
சென்னை: 75 வயதை கடந்தபோதும், இன்னும் தமிழ் சினிமாவின் ஒற்றை சூப்பர் ஸ்டாராக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் ரஜினி, தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு, அவரது 173-வது திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாக ரசிகர்களிடையே உச்சத்தில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இன்று அதிகாரப்பூர்வ பதில் கிடைத்துள்ளது.

ராஜ்கமல் தயாரிப்பு
ரஜினிகாந்தின் 173-வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல காமெடி இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளதாகவும் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கூட்டணி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே சுந்தர்.சி இந்த படத்தில் இருந்து விலகினார். இதனால், தலைவர் 173 குறித்து பல்வேறு குழப்பங்களும், வதந்திகளும் பரவத் தொடங்கின.
ரஜினியை சந்தித்த இளம் இயக்குநர்கள்
இதன் பிறகு, ரஜினிகாந்த்தை சந்தித்து கதை சொல்ல பல இளம் இயக்குனர்கள் வரிசை கட்டியதாக தகவல்கள் வெளியாகின. அதில் குறிப்பிடத்தக்கவர்கள்: சூர்யா நடிப்பில் 'கருப்பு' படத்தை இயக்கிய நடிகர் - இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, பார்க்கிங் படத்திற்காக தேசிய விருது பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன் மேலும் சில புதுமுக இயக்குநர்கள் முயற்சி செய்தனர்.
இவர்களில் யார் தேர்வாகப்போகிறார்? ரஜினிகாந்த் எந்த மாதிரியான கதையை தேர்வு செய்வார்? என்ற கேள்விகள் ரசிகர்களிடையே தீவிரமாக பேசப்பட்டு வந்தன.
இன்று காலை 11 மணிக்கு வந்த தலைவர் அப்டேட்
இந்த நிலையில், தலைவர் 173 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்று மாலை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று வெளியாகிய அறிவிப்பு ரசிகர்களை செமையாக உற்சாகப்படுத்தியுள்ளது.
சிபி சக்ரவர்த்தி இயக்கம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் கமர்ஷியல் வெற்றியை பெற்ற 'டான்' படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்கவுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ரஜினி - அனிருத் கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் என்பதால், இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
'தலைவர் 173' திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் ரிலீஸ் என்றாலே, ரஜினி ரசிகர்களுக்கு அது திருவிழா தான். போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஸ்டைல், டைட்டில் டிசைன், வெளியீட்டு அறிவிப்பு ஆகியவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன மாதிரியான கதை
'டான்' படத்தின் மூலம் யூத், கமர்ஷியல், எமோஷன் ஆகியவற்றை கலந்த கதை சொல்லலில் தனது திறனை நிரூபித்த சிபி சக்ரவர்த்தி, ரஜினிகாந்துக்காக எந்த மாதிரியான கதைக்களத்தை தேர்வு செய்திருப்பார்? மாஸ் அரசியல் கதையா? சாதாரண மனிதனின் எழுச்சியா? அல்லது முற்றிலும் புதிய ஜானரா? என்ற ஆர்வம் தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
75+ வயதிலும் தொடரும் ரஜினி வேகம்
ஒருபுறம் 'ஜெயிலர் 2', மற்றொரு புறம் 'தலைவர் 173', அதையும் தாண்டி தொடர்ந்து புதிய இயக்குனர்களுடன் பணியாற்றும் துணிச்சல் - ரஜினிகாந்த் இன்னும் ஏன் சூப்பர் ஸ்டார் என்பதற்கான காரணம் இதுதான் என்று ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர். மொத்தத்தில், தலைவர் 173 அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக மாறியுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications