தலைவர் 173 கதை இதுதானா? இந்த படத்தின் காப்பி? ரஜினியை டெய்லராக மாற்றிய சிபி! லீக்கான தகவல்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தை 'டான்' பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவது உறுதியாகியுள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக, அதைவிட வேகமாக ரசிகர்கள் கதையை எழுத ஆரம்பித்துவிட்டனர் என்பதே தற்போது சமூக வலைதளங்களில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
ஏற்கனவே தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்று அறிவித்து, பின்னர் அவர் விலகியதால், "அடுத்த இயக்குனர் யார்?" என்ற கேள்வி எழுந்த நிலையில், இப்போது சிபி சக்கரவர்த்தியை தேர்வு செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.

இளம் இயக்குனர்கள்
லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் போன்ற இளம் இயக்குனர்களுடன் பயணித்து வரும் ரஜினிகாந்தின் பட்டியலில், இப்போது 'டான்' பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் இணைந்துள்ளார். இதனால், புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு ரஜினி தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறார் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.
போஸ்டர் யூகங்கள்
படக்குழு வெளியிட்டுள்ள புரோமோ வீடியோ மற்றும் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் டெய்லர்கள் பயன்படுத்தும் கத்திரிக்கோல், துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள் மற்றும் "ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஹீரோ இருப்பார்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளன.
இவற்றை பார்த்த ரசிகர்கள், "போஸ்டர் மட்டும் தான்... ஆனால் கதையை சொல்லிவிட்டார்கள்" என்று கூறும் அளவுக்கு, படத்தின் கதைக்களத்தை யூகிக்கத் தொடங்கியுள்ளனர்.
ரஜினி ஒரு டெய்லர்
போஸ்டர் வெளியானதும் சமூக வலைதளங்களில் பரவிய முக்கிய யூகம், ரஜினி ஒரு சாதாரண டெய்லராக நடிக்கிறார் என்பதுதான். அதனை தொடர்ந்து, அந்த டெய்லரின் குடும்பத்திற்கு தொல்லை தரும் கேங்ஸ்டர் கும்பலை அவர் எதிர்த்து வீழ்த்துவார் என்பதே இந்த படத்தின் கதை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், படம் இன்னும் தொடங்குவதற்குள்ளேயே, கதை, திருப்பங்கள், கிளைமாக்ஸ் வரை ரசிகர்கள் கற்பனையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹாலிவுட் The Outfit கனெக்ஷன்
இதற்கு மேலாக, 2022-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் 'The Outfit' உடன் தலைவர் 173-ஐ ஒப்பிட்டு பேசவும் நெட்டிசன்கள் தொடங்கிவிட்டனர். அந்த படத்திலும் ஒரு சாதாரண டெய்லர், ஆபத்தான கேங்ஸ்டர் கும்பலை எதிர்கொள்வதே கதை என்பதால், "அதே கதையை அடிப்படையாக வைத்து தலைவர் 173 உருவாகுமா?" என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.
ஆனால், இவை அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் ஓடும் யூகங்களும் வதந்திகளும் மட்டுமே. உண்மையில் 'The Outfit' படத்திலிருந்து கதை எடுக்கப்பட்டதா, அல்லது முற்றிலும் புதிய கதையா என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும்.
படம் ரிலீஸ் ஆக இன்னும் காலம் இருக்கிறது. ஆனால் கதை, ஒப்பீடு, சர்ச்சை எல்லாம் இப்போதே தயாராகிவிட்டது. ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. இதனால், தலைவர் 173 படம் ரிலீஸுக்கு முன்பே சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை உருவாக்கி விட்டது என்பதே தற்போதைய நிலை.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications