பட்டப்படிப்பு தேவையில்லை! மத்திய அரசு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை! யார் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆயுத வாகனங்கள் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் 130+ ஜூனியர் டெக்னீசியன், டிப்ளமோ டெக்னீசியன் மற்றும் ஜூனியர் மேனேஜர் உள்ளிட்ட காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்குக் கல்வித் தகுதி என்ன.. வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்டவை குறித்து நாம் பார்க்கலாம்.
பாதுகாப்புத் துறையில் இயங்கும் மிக முக்கியமான மத்திய அரசு பொதுத்துறை நிறுவனம் Armoured Vehicles Nigam Limited. சென்னை ஆவடியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் ஆலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கிறது.

பொதுத்துறை நிறுவனம்
இதற்கிடையே இந்த ஆயுத வாகனங்கள் நிகாம் லிமிடெட் (மெஷின் டூல் புரோட்டோடைப் ஃபேக்டரி) நிறுவனத்திற்குச் சொந்தமாக மகாராஷ்டிர மாநிலம் தானேவில் ஒரு ஆலை இருக்கிறது. அந்த ஆலையில் காலியாக இருக்கும் ஜூனியர் டெக்னீசியன், டிப்ளமோ டெக்னீசியன் மற்றும் ஜூனியர் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இது மத்திய அரசின் கீழ் வரும் ஒரு காண்டிராக்ட் வேலையாகும்.
காலியிடங்கள்
ஜூனியர் டெக்னீசியன் (ஒப்பந்தம்) தேர்வாளர் பதவிக்கு 130+ காலியிடங்கள் உள்ளன. மேலும் ஜூனியர் டெக்னீசியன் (ஒப்பந்தம்) (மில்ரைட்) பிரிவில் 15 காலியிடங்கள் உள்ளன. ஜூனியர் டெக்னீசியன் (ஒப்பந்தம்) எலக்ட்ரிக் ஃபிட்டர் பிரிவில் 5 காலியிடங்களும், எலக்ட்ரானிக் ஃபிட்டருக்கு 25 காலியிடங்களும் உள்ளன. ஜூனியர் டெக்னீசியன் (ஒப்பந்தம்) ஃபிட்டருக்கு 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜூனியர் டெக்னீசியன் (ஒப்பந்தம்) மெஷினிஸ்ட் மற்றும் டர்னர் பிரிவுகளில் தலா 35 காலியிடங்கள் உள்ளன. டிப்ளமோ டெக்னீசியன் (ஒப்பந்தம்) (டூல் டிசைன்) பதவிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேலாளர் (ஒப்பந்தம்) சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது.
கல்வித் தகுதி
இதில் ஒருவர் எந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறாரோ.. அவர் குறிப்பிட்ட பிரிவில் தேசிய வர்த்தகச் சான்றிதழ் அல்லது தேசியத் தொழிற்பயிற்சிச் சான்றிதழ் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். சில குறிப்பிட்ட காலியிடங்களுக்கு டிப்ளமோவும் படித்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. Directorate of Ordnance (Coordination and Services)இன் அதிகாரப்பூர்வத் தளத்தில் எந்தப் பணியிடத்திற்கு என்ன கல்வித் தகுதி என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வயது: 28 (அரசு விதிகளின் கீழ் எஸ்சி, எஸ்டி ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது)
இதர தகவல்கள்
சம்பளம்: ரூ. 34,227 முதல் ரூ.47,610
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை.
இதர பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வத் தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து Armoured Vehicles Nigam Limited முகவரிக்கு அனுப்ப வேண்டும். உடன் வைக்க வேண்டிய ஆவணங்கள், முகவரி உள்ளிட்ட தகவல்கள் அதிகாரப்பூர்வத் தளத்தில் இருக்கிறது.
கடைசி தேதி: நவம்பர் 21, 2025
-
மத்திய அரசு வேலை.. 243 பணியிடங்கள்.. 1.77 லட்சம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications