Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IT Jobs: நாளை இண்டர்வியூ.. சென்னையில் ஐடி வேலை தரும் எச்சிஎல் நிறுவனம்.. உடனே ரெடியாகுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல்-லில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நாளை சென்னையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கு பலன் பெறலாம்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது International Banking Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

hcl-walk-in-drive-for-international-banking-voice-process-role-and-interview-to-be-held-on-november

மேலும், கிளைன்ட் சர்வீஸ் அல்லது வாய்ஸ் புராசஸ் ஆபரேஷனில் சர்ட்டிபிகேட் பெற்றிருந்தால் அதுபிளஸ் பாயிண்ட்டாகும்.

அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். பிரிட்டன் ஆக்சென்ட்டில் பேச தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.
மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 2 ஆண்டு வரை இன்டர்நேஷனல் வாய்ஸ் அடிப்படையிலான கிளைன்ட் சப்போர்ட் இருக்க வேண்டும். UK கிளைன்ட் சார்ந்து பணியாற்றி இருந்தால் அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

மேலும் ஸ்ட்ராங் இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வண்டும். சிஆர்எம் பிளாட்பார்ம்ஸில் சேல்ஸ்போர்ஸ் (Salesfore), ஜென்டெஸ்க்(Zendesk) தெரிந்திருக்க வேண்டும். பிரிட்டனின் பிசினஸ் கல்சர் அறிந்திருந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியை வீட்டில் இருந்து செய்யவோ அல்லது ஹைபிரிட் மாடலில் பணிபுரியும் வாய்ப்பு கிடையாது. நேரடியாக அலுவலகம் வந்து தான் பணியாற்ற வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (நவம்பர் 6) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai, Tamil Nadu - 600 076 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் நாவலூரில் உள்ள சந்தியா இன்போசிட்டியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+