Msc - MA படிப்பை முடித்தவரா.. டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. பிப்., 1 கடைசி நாள்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிப்ரவரி 1ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதி வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது TCS Atlas hirng batch 2026 என்ற பெயரில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு என்பது நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ், அனலிட்டிக்ஸ் மற்றும் பிசினஸ் கன்சல்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு 2026ம் ஆண்டில் எம்எஸ்சி, எம்ஏ பாடப்பிரிவுகளில் கணிதம், Statistics அல்லது Economics படிப்புகளை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு 10, பிளஸ் 2, டிப்ளமோ, கல்லூரி படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண் இருக்க வேண்டும். கல்லூரி படிப்பை முழுநேரமாக படித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வியில் படிப்பை முடித்தவர்களுக்கு அனுமதி கிடையாது.
விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனையும் பணிக்கு சேரும் முன்பாக முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) ஆகும். ஒவ்வொருவரும் TCS NextStep Portal வழியாக அப்ளை செய்ய வேண்டும். அதில் IT Category-யை தேர்வு செய்து பிற விவரங்களை கொடுத்து அப்ளை செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கான தேர்வு மையத்தையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பிறகு டிசிஎஸ் சொல்லும் நாளில் அந்த குறிப்பிட்ட மையத்துக்கு சென்று தேர்வு எழுத வேண்டும்.
ஏதாவது உதவி வேண்டும் என்றால் டிசிஎஸ் ஹெல்ப் டெஸ்க்கை தொடர்பு கொண்டு பேசலாம். அதன்படி [email protected] அல்லது 18002093111 என்ற டோல்ப்ரீ எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். மேலும் தேர்வு என்பது 115 நிமிடங்கள் வரை நடக்கும். Statistics, Mathematics, Economics, Programming, Verbal Ability என்ற 5 வகையில் இருக்கும். மேலும் இதுதொடர்பான பழைய கேள்விகள் யூடியூப் சேனல்களில் உள்ளன. அதனை பார்த்து கொண்டால் விண்ணப்பதாரர்களுக்கு கேள்வி தொடர்பான ஐடியாக்கள் கிடைக்கும்.
மேலும் தற்போதைய அறிவிப்பில் பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசியில் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் சென்னையில் டிசிஎஸ் நிறுவனம் உள்ளதால் அங்கு கூட பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications