பெங்களூரில் மனைவி தொல்லை.. எந்த புதுமாப்பிள்ளைக்கு இப்படி ஆகவே கூடாது.. கனவிலும் நினைக்காத சம்பவம்
பெங்களூர்: திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்பு. இருவரும் வேறு வேறு வாழ்க்கை சூழலில் வாழ்ந்து பழகியவர்கள். இருவருக்கும் வாழ்வியல் ரீதியாக நடைமுறையில் பழகிக்கொள்வது என்பது சவாலானதாகவே இருக்கும். அதனை இருவரும் அனுசரித்து, எது சரியானது என்பதை புரிய வைத்து வாழ வேண்டும். அதைவிடுத்து அவசரப்பட்டு வாழ்க்கையில் முடிவெடுப்பது தவறு.. பெங்களூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
புதிதாக திருமணம் ஆன கணவன் மனைவி இடையே பரஸ்பரம் புரிதல் ஏற்படுவதற்கு முன்பே, சண்டைகள் அதிகமாகி பிரிந்துவிடுவது அதிகமாகி வருகிறது. எதிர்பார்ப்புகளுடன் வரும் இருவருமே, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு பதில், ஒருவரை ஒருவர் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறார்கள். இதில் இருவருமே வீம்பாக இருக்கும் போது, சண்டை தொடங்குகிறது.

என்ன காரணம்
இரு குடும்ப வீட்டில் உள்ளவர்களின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், எதிர்பார்ப்புகள் இவற்றை புறம்தள்ளி மனம் போன போக்கில் வாழ விரும்புகிறார்கள். இது இருவருக்கும் இடையே சண்டையாக மாறுகிறது. இந்த சண்டையில் பிரிவது ஒரு கொடுமை எனில், தவறான முடிவெடுக்கவும் செய்கிறார்கள். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் திருமணம் ஆன 8 மாதத்தில் புது மாப்பிள்ளை தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.
பெங்களூரு கிரிநகர் பகுதியில் வசித்து வந்த 29 வயதாகும் ககன்ராவ், வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பெயர் மேகனா ஜாதவ். இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினமும் ககன்ராவிடம், அவரது மனைவி தகராறு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த ககன்ராவ் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தார்.
அண்ணனின் முடிவுக்கு அண்ணி காரணம்
அதன்படி அவர் தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுபற்றி அறிந்ததும் ககன்ராவின் குடும்பத்தினர் கதறி அழுதனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்த ககன்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தனது அண்ணனின் சாவுக்கு அவரது மனைவி மேகனா ஜாதவ் தான் காரணம் என ககன்ராவின் சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அக்டோபரில் ஒரு ஜோடி
முன்னதாக கடந்த அக்டோபரில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் ஆரோஹள்ளி அருகே அன்னதொட்டி கிராமத்தை சேர்ந்த 30 வயதாகும் ரேவந்த்குமார். இவருக்கும், மல்லிகா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தான் கல்யாணம் நடந்தது. பிடதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ரேவந்த்குமார் வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்கு பின்பு புதுமண தம்பதி சந்தோஷமாக வாழ்ந்தனர்.
மனைவியே காரணம்
ஆனால் அண்மை காலமாக ரேவந்த்குமாருக்கும், அவரது மனைவி மல்லிகாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரேவந்த்குமார் மனம் உடைந்துபோனாராம். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 21ம் தேதி காலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேவந்த்குமார் பிடதி ரயில் நிலையத்திற்கு சென்றார். பின்னா் அங்கு வந்த ரயில் முன்பாக திடீரென்று ரேவந்த்குமார் பாய்ந்தார். இதனால் உயிரிழந்தார். கடைசியாக அவர் செல்பி வீடியோவில் பேசி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் திருமணத்திற்கு பின்பு தனது மனைவி மல்லிகா மிகுந்த தொல்லை கொடுக்கிறார். தனது முடிவுக்கு அவரே காரணம். அவரது தொல்லையை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று பேசி இருந்தார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications