திமுகவா? இல்லை தவெகவா? க்ளு கொடுத்த ராமதாஸ்.! ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்கள்!
சென்னை: ராமதாஸ் தரப்பு சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதில் தெளிவில்லாத சூழல் இருக்கும் நிலையில், ஒரே நாளில் நடந்த 3 சம்பவங்கள் அவர்கள் எந்தக் கட்சியை நோக்கிச் செல்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டும் வகையில் இருக்கிறது. அவர்கள் அப்படி என்ன செய்தார்கள். இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. அதிமுக கூட்டணியில் இப்போது வரை பாஜகவும், பாமகவும் இணைந்துள்ளன. தேர்தல் நெருங்கும்போது வேறு சில கட்சிகளும் கூட வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை முன்பு இருந்த கூட்டணி அப்படியே தொடரும் எனத் தெரிகிறது.

பாமக
இதில் பாமக இப்போது இரு பிரிவுகளாக உள்ளன. முன்பே குறிப்பிட்டது போல அன்புமணி தலைமையிலான பாமக தனது கூட்டணியை உறுதி செய்துவிட்டது. அதேநேரம் ராமதாஸ் தரப்பு இதுவரை தங்கள் கூட்டணியை அறிவிக்கவில்லை. ராமதாஸ் யாருடன் கூட்டணிக்குச் செல்வார் என்பதில் கேள்வியே இருந்து வந்தது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நடந்த 3 சம்பவங்கள் திமுகவை நோக்கி ராமதாஸ் செல்ல வாய்ப்பு இருப்பதையே காட்டுகிறது.
சம்பவம் 1
அதாவது தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு கேள்விகளுக்கும் விரிவான பதிலை அளித்தார். அதில் சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. திருமாவளவன் இருக்கும் கூட்டணியோடு நீங்க இணைய வாய்ப்பு இருக்கிறதா.. இல்லை அதில் எதாவது சிக்கல் இருக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "அரசியலில் எதுவும் நடக்கும்.. என்ன வேண்டுமானாலும் நடக்கும்.. எதிர்பாராத விதமாக எல்லாமே நடக்கும்.. எதுவும் நடக்காதென்று சொல்ல முடியாது!" என்று சொன்னார்.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் தான் பாமகவும் விசிகவும் ஒரே கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரு கட்சிகளும் இடம் பெற்று இருந்தது. அதன் பிறகு இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம் பெற்றதே இல்லை. விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இருக்காது.. பாமக கூட்டணியில் விசிக இருக்காது என்ற சூழலே இருந்தது. இப்போது திமுக கூட்டணியில் விசிக இருப்பதால் ராமதாஸ் கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வி இருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் எனக் குறிப்பிட்டார் ராமதாஸ்.
சம்பவம் 2
அதேபோல நீண்ட அனுபவம் கொண்ட நீங்கள் ஸ்டாலின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்.. ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ராமதாஸ், "ஸ்டாலினுடைய ஆட்சி நல்லா தான் இருக்கு" என்று பதிலளித்திருந்தார். எதிர்க்கட்சி கூட்டணியில் இருப்போர் திமுக ஆட்சியை விமர்சிக்கும் நிலையில், திமுக ஆட்சிக்கு ஆதரவாகவே ராமதாஸ் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
சம்பவம் 3
மேலும், புதிய தலைமுறை சேனலுக்கு ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான ஜிகே மணி அளித்த பேட்டியிலும் கூட்டணி ஆட்சி அல்லது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வைக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ராமதாஸுக்கோ அல்லது பாமகவுக்கு கூட்டணி ஆட்சி என்பதில் யோசனை இல்லை என்றும் தேர்தலில் மட்டுமே கூட்டணியே தவிர ஆட்சியில் பங்கு என்பதை நாங்கள் கேட்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தைக் காங்கிரஸ் வைத்துள்ள நிலையில், அது அங்குச் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் தான் நாங்கள் நிச்சயம் கூட்டணி ஆட்சியை எல்லாம் கேட்க மாட்டோம் என்று சிக்னல் கொடுத்துள்ளனர் ராமதாஸ் தரப்பினர்!
தவெக நோ சான்ஸ்
இதுபோக தவெக- ராமதாஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூடச் சொல்லப்பட்டது. அது குறித்த கேள்விக்கும் ராமதாஸ் மிக தெளிவாகவே பதிலளித்திருந்தார். உங்கள் கற்பனைக்கு எல்லாம் தீனி போட முடியாது இந்தத் தகவலைக் கற்பனையான தகவல்தான் என்பதால் அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.
அதாவது ஒரே நாளில் தவெக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பதைச் சொன்னதோடு மட்டுமில்லாமல்.. திமுக கூட்டணிக்கு சிக்னல் கொடுக்கும் வகையில் 3 சம்பவங்கள் நடந்துள்ளன. இது தமிழ்நாடு தேர்தல் களத்தில் முக்கியமானதாகவே மாறியிருக்கிறது.
-
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications