பெண்களுக்கு மாதம் ரூ 2500 தரலாம்! Fund பற்றி கவலைப்படாதீங்க! எடப்பாடி பழனிசாமியிடம் மோடி உறுதி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4, 5 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதி குறித்து அதிமுக தலைமைக்கு பாஜக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாம். அதிலும் முக்கியமான ஒரு திட்டத்தை சேர்ப்பது குறித்தும் பிரதமர், எடப்பாடி பழனிசாமிக்கு வலியுறுத்தியுள்ளாராம்.
தேர்தல் என வந்துவிட்டாலே ஒவ்வொரு கட்சியினரும் தரும் தேர்தல் அறிக்கை, தேர்தல் வாக்குறுதிகள்தான் கதாநாயகன். அரசியல் கட்சிகளில் மூத்த நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழுவை கட்சித் தலைமை அமைக்கும்.

அவர்கள் 234 தொகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பிரதான பிரச்சனைகளை கேட்டறிவர். பின்னர் மக்கள் வைக்கும் கோரிக்கைக்கு என்ன செலவாகும், அது அத்தியாவசியமானதா என்பதை அந்த குழு தீர்மானித்து கட்சித் தலைமையிடம் அறிக்கையாக தாக்கல் செய்யும்.
தேர்தல் அறிக்கை
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைகளை கட்சித் தலைவரும் ஆய்வு செய்து அதில் திருத்தங்கள், புதிதாக சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளை செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது வழக்கம்!
கிரைண்டர், மிக்ஸி
அந்த வகையில்தான் திமுகவின் கலைஞர் டிவி, ரூ. 1-க்கு ரேஷன் அரிசி, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, வீடுதோறும் ரேஷன் பொருட்கள், மகளிர் விடியல் பயணம், அதிமுகவின் அம்மா கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், தாலிக்குத் தங்கம், அம்மா உணவகங்கள் போன்ற மகத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
மக்கள் மத்தியில் வரவேற்பு
இவற்றிற்கு மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் இன்னும் தமிழக தேர்தலுக்கு 4, 5 மாதங்களே உள்ள நிலையில் திமுக சார்பிலும் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
கதாநாயகன்
தேர்தல் நெருக்கத்தில் இவர்கள் தயாரித்த அறிக்கை வெளியாக வாய்ப்பிருக்கிறது. திமுகவை பொருத்தமட்டில், 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், பெண்களுக்கு விடியல் பயணம், காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
1500 ரூபாயா
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வரும் தேர்தலில் ஆட்சி தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை திமுக அரசு எடுத்து வருகிறது. அதன்படி மகளிர் உரிமைத் தொகை 1000 திலிருந்து 1500 ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
1900 ரூபாய் மிச்சம்
அது போல் பொங்கல் பரிசுத் தொகையையும் சற்று அதிகரித்து கொடுக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ 1000, பேருந்து பயணத்தால் ரூ 900 என மாதாமாதம் 1900 ரூபாய் சேமிக்கப்படுகிறது.
கனிமொழிக்கு பாராட்டு
இந்த திட்டம் பெண்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. "கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு கனிமொழி தலைமையிலான குழு தேர்தல் அறிக்கை தயாரித்ததால்தான் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வென்றது. எனவே இந்த 2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக" "வெல்லும் பெண்கள்" மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திமுக அரசு
இதனிடையே அதிமுக இந்த முறை ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக போய் தேர்தல் பிரச்சாரம் செய்து திமுக அரசுக்கு எதிரான விஷயங்களை பேசி வருகிறார்.
அதிமுக தேர்தல் அறிக்கை
ஆனாலும் ஆட்சிக்கு எதிரான விஷயங்கள் தேர்தலில் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி பேசியிருக்கிறாராம். அப்போது அவர் தேர்தல் அறிக்கை குறித்து தெரிவித்துள்ளாராம்.
மோடி வாக்குறுதி
அதில் மகளிருக்கு மாதம் ரூ 2500, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களைச் சேர்க்க சொல்லியிருக்கிறாராம். மேலும் நிதி பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் பிரதமர், எடப்பாடி பழனிசாமியிடம் வாக்குறுதி அளித்துவிட்டாராம். இதனால் குஷியான எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அறிக்கை குழுவிடம், நமது தேர்தல் அறிக்கை திமுகவினுடையதை விட சிறப்பாக இருக்க வேண்டும். நமது அறிக்கைத்தான் கதாநாயகனாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளாராம்.
-
மிஸ்ஸான க.பாளைம்.. ஆதரவு கோரிய அதிமுக வேட்பாளரிடம் அண்ணாமலை சொன்ன வார்த்தை.. யாருமே எதிர்பார்க்கலை -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications