118 சட்டசபை தொகுதிகளை கவர் செய்த எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அட்வைஸ்!
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணத்தில் 118 சட்டசபை தொகுதிகளுக்குச் சென்றுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் இதுவரை 3 கட்டங்களாக 118 சட்டப்பேரவை தொகுதிகளில் பரப்புரையை நிறைவு செய்துள்ளார், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

வரும் திங்கட்கிழமை முதல் மதுரையில் 4 ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணத்தால் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருப்பதாக அக்கட்சியின் தலைமை கருதுகிறது. இந்த சூழலில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்துக்கு இடையே நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என அமித் ஷா திட்டவட்டமாக கூறி வருகிறார். மேலும் தவெக மாநாட்டில் அதிமுக மீது விமர்சனம் வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த விஷயங்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களுக்கு உள்ளான நிலையில், இன்று அவை பற்றி விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தில் உணர்ந்த விஷயங்கள் குறித்தும் பேச இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தல் பணிகள், பூத் கமிட்டி, மற்றும் கூட்டணியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை அதிமுக மேற்கொண்டு வரும் நிலையில் அது தொடர்பான ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்குவார் எனக் கூறப்படுகிறது.
மா.செக்கள் கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 30.8.2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக அதிமுக தலைமை கழகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகபினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இந்தக் கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். பூத் கமிட்டியை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்திலும் அது தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.
இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடித்ததாக தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைவரும் முழுவீச்சில் தயாராக வேண்டும் என்றும், நிச்சயம் நமது உழைப்பு அதிமுகவை ஆட்சியில் அமர வைக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications