விஜய் மீதான அதிருப்தியை மட்டுப்படுத்தினர்.. அதிமுக தவறு செய்துவிட்டது.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் அதிமுகவின் இந்த நடவடிக்கை காலம் தாழ்ந்த ஒன்றாகவும், கரூர் விவகாரத்தின் போதே விஜய்யை விமர்சித்திருந்தால், அது தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் என்று பத்திரிகையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும், தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று தீர்மானம் போடப்பட்டது. இதன் மூலமாக அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின், விஜய்யை கடுமையாக சாட தொடங்கி இருக்கின்றனர் அதிமுகவின் முக்கிய தலைகள்.

எடப்பாடி பழனிசாமியின் முக்கிய ஆதரவாளரான கேபி முனுசாமி நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், சினிமாவில் நடித்த புகழை வைத்துக் கொண்டு தங்களை முதன்மைபடுத்துகின்றனர். ஏதோ பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல் முதன்மைப்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் உருவாகிய உள்ள புதிய கட்சிகள் மாய பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விஜய்யை மறைமுகமாக சாடினார்.
இன்று நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், 10 படங்கள் ஓடினாலே முதல்வராகிவிடலாம் என்று எண்ணுகின்றனர். விஜய் இன்னும் பயிற்சி பெற வேண்டும் என்று விமர்சித்துள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்கள் விஜய்யை சாடி வருவது தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனென்றால் இதுவரை விஜய்யை திமுக மற்றும் நாதக மட்டுமே கடுமையாக சாடி வந்தது.
தற்போது தவெக அதிமுகவின் விமர்சனங்களையும் சமாளிக்க வேண்டிய தேவை எழுந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேசுகையில், தவெகவை கூட்டணிக்கு அதிமுக அழைத்து வந்தது. ஆனால் தவெக பொதுக்குழுவுக்கு பின் அதிமுகவின் அணுகுமுறை மாறி இருக்கிறது. இந்த நிலைப்பாட்டை அதிமுக முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும்.
கரூர் விவகாரத்தில் விஜய் கேட்காமலேயே அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. சட்டசபையிலும் அதிமுகவின் குரலாக பேசி இருந்தது. அதனால் இயல்பாகவே விஜய் மீது எழுந்திருக்க வேண்டிய எதிர்ப்பை, அதிமுக மட்டுப்படுத்திவிட்டது. அப்போதே விஜய்யை பலவீனமாக்கி இருக்க வேண்டும். ஆனால் கூட்டணிக்கு வருவார் என்று நம்பி மென்போக்கை கடைபிடித்தனர்.
இதனால் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இருந்து மீள்வதற்காக அதிமுகவினர் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய்யை விட அதிமுக அறுவடை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் அதிமுகவின் விமர்சனம் கால தாமதமானது. கரூர் விவகாரத்திலேயே விஜய்யை விமர்சித்திருந்தால், அவர் பலவீனமாக உணர்ந்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
-
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
சார், இது பேட்டரி வைக்கிற இடம்.. நாகர்கோவிலில் எடப்பாடி வேனில் சல்லடை போட்ட பறக்கும் படை அதிகாரிகள் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி












Click it and Unblock the Notifications