Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்! அமைதியாக அமமுக! திணறும் தேமுதிக! ஓபிஎஸ் நிலைமை தான் ரொம்ப மோசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வரும் நிலையில், சில முக்கிய அரசியல் தலைவர்கள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் காத்திருக்கின்றனர். அந்த வரிசையில், தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தவெக தலைவர் விஜய் எடுக்கும் முடிவுக்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கி விட்டன. மிக வலிமையாக இருந்த திமுக கூட்டணியில் கூட தற்போது லேசாக முட்டல் மோதல் என தொடங்கி இருக்கிறது.

அதிமுக- பாஜக -பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்ததாக எந்த கட்சிகள் இணைய போகிறது என்ற தகவல்கள் உறுதியாக இல்லை. இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

AMMK DMDK amil Nadu Assembly Election 2026

2026 சட்டமன்ற தேர்தல்

ஆனால், தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்தும் தெளிவற்ற சூழல் நீடிக்கிறது. கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில், கூட்டணி அறிவிக்கப்படும் என முன்பு பிரேமலதா கூறியிருந்தார். ஆனால் மாநாட்டில் அவர் பேசுகையில், "ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இன்னும் தங்கள் கூட்டணியை அறிவிக்காத நிலையில், நாம் மட்டும் ஏன் அவசரம் காட்ட வேண்டும்?" என கூறி, நேரடி அறிவிப்பைத் தவிர்த்தார். கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக பொதுக்குழுவில், கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க, பொதுச்செயலர் டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.

தேமுதிக நிலைப்பாடு

இதையடுத்து, அமமுக -தவெக கூட்டணி உருவாகலாம் என்றும், அல்லது மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக இடம் பெறலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் இருவிதமான கருத்துகள் பரவலாக பேசப்படுகின்றன. இதற்கிடையில், தனித் தனி அரசியல் பாதையில் பயணித்து வரும் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் அண்மைக் காலமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், ஓபன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் இணையப்போகிறார் என்ற கேள்வி இன்னும் விடை பெறவில்லை.

ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம்

அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியாத சூழலில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை, தவெக தலைமையிலான கூட்டணியில் இணைக்க, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், "தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதத்தில் 30 நாட்கள் இருக்கின்றன. அந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியது, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிமுக - திமுக கூட்டணி

மொத்தத்தில், பிரேமலதா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகிய மூவரும், தங்கள் அடுத்த கட்ட அரசியல் நகர்வை தீர்மானிக்காமல், தவெக தலைவர் விஜய் எடுக்கும் முடிவை எதிர்பார்த்து, 'ஆத்துல ஒரு கால்,. சேத்துல ஒரு கால்" என யார் பக்கமும் செல்லாமல், கடைசி நேரம் வரை காத்திருக்கும் சூழல் தற்போது நிலவி வருகிறது. இதனால் திமுக அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+