Bhagavanth Kesari: அதுல யுபிஎஸ்சி! இதுல மிலிட்டரி! அங்க காஜல்! இங்க பூஜா! மொத்தத்துல இது "ஜனநாயக கேசரி"!
சென்னை: விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் டிரெய்லர் வெளியான நிலையில் அந்த 2 நிமிட டிரெய்லரில் இடம் பெற்ற காட்சிகளை பகவந்த் கேசரியுடன் ஒப்பிட்டு சமூகவலைதளங்களில் ஆன்டி விஜய் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.
வரும் 9ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸாகிறது. இந்த படத்திலிருந்து 4 பாடல்கள் வெளியான நிலையில் தற்போது டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த டிரெய்லரில் நிறைய அரசியல் வசனங்கள் பேசப்பட்டுள்ளன. அது போல் கட்சி குறித்த சில விஷயங்களும் அந்த படத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த டிரெய்லரை பார்க்கும் பகவந்த் கேசரியில் உள்ள சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் இது கேசரியின் ரீமேக்கா என பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். கேசரிக்கும் ஜனநாயகனுக்கும் இருக்கும் வித்தியாசங்களை பார்ப்போம்.
தெலுங்கு படமான பகவந்த் கேசரியை அனில் ரவிப்புடி இயக்கியுள்ளார். ஜனநாயகனை எச்.வினோத் டைரக்ட் செய்துள்ளார். ஜனநாயகன் டிரெய்லரை பார்க்கும் போது அதில் விஜய் ஒரு முன்னாள் சிறைக் கைதி. அவருக்கு ஒரு குழந்தையை வளர்க்கும் பொறுப்பு இருக்கிறது.

அந்த குழந்தைதான் லிவன்யா. சுந்தரி சீரியலில் நடித்த குழந்தை. அது வளர்ந்து பெரியதாகும் போது மமிதா பைஜு. மமிதா பைஜுவை ராணுவத்தில் சேருமாறு விஜய் சொல்கிறார். ஆனால் கேசரியில், ஸ்ரீலீலாவை யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுமாறு பாலய்யா வற்புறுத்துவார்.
இரு படங்களிலும் ஸ்ரீலீலா, மமிதாவின் கேரக்டர் பெயர் விஜிதான். காஸ்ட்யூம் கூட அப்படியே காப்பி அடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. பாலகிருஷ்ணாவுக்கு பதில் விஜய் நடித்திருக்கிறார். ஸ்ரீலீலாவுக்கு பதில் மமிதா பைஜு, காஜலுக்கு பதில் பூஜா ஹெக்டே, அர்ஜுன் ராம்பால் ரோலில் பாபி தியோல்- இவைதான் பகவந்த் கேசரிக்கும் ஜனநாயகனுக்கும் இருக்கும் வித்தியாசம் என்கிறார்கள்.
என்ன சிறிய சிறிய மாற்றங்கள் ஜனநாயகனில் செய்யப்பட்டுள்ளன. கேசரியில் எந்த அரசியலும் பேசப்படவில்லை. ஆனால் ஜனநாயகனில் விஜய்யின் பெயர் Thalapathy Vetri Kondan (TVK). அது போல் தவெகவின் இரட்டை யானையும் ஜனநாயகனில் இடம் பெற்றுள்ளது.

அந்த இரட்டை யானைக்கு மத்தியில் விஜய் நிற்பது போல் இருக்கிறது. பாபி தியோல் "மக்களுக்கு நல்லது பண்றேன்னு இதுக்குள்ள வராத, உன்ன காப்பாத்திக்கிட்டு ஓடி போயிடு" என சொல்வதும், இன்னொரு வில்லன் பிரகாஷ்ராஜ் "உன்னால ஒன்னும் பண்ண முடியாது விலகிப்போ" என சொல்வதும் இடம் பெற்றுள்ளது.
அது போல் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வாங்கடான்னு வந்து கொள்ளையடிக்கறீங்க, கொலை பண்றதுக்குமாடா அரசியலுக்கு வரீங்க? என விஜய் சாட்டையால் அடிப்பது போல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. "உன்ன காலி பண்ணிடுவேன், அசிங்கப்படுத்திடுவேன்னு சொல்ற எவனா இருந்தாலும் சரி, திரும்பி போற ஐடியாவே இல்ல" "ஐ யாம் கம்மிங்" என்கிறார்.
பகவந்த் கேசரியில் மருத்துவத்தில் நடக்கும் முறைகேட்டை கண்டுபிடிக்கும் ரோலில் பாலய்யா நடித்திருந்தார். ஆனால் ஜனநாயகனில் நாட்டை காப்பாற்றும் ரோலில் விஜய் நடித்திருக்கிறார். கடந்த வாரம் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எச்.வினோத், "இது அந்த படமா இந்த படமா என எல்லாரும் கேட்கிறார்கள். இது எந்த படமும் இல்லை, தளபதி படம்" என தெரிவித்தார். தற்போது டிரெய்லரிலேயே இது எந்த படம் என தெரிந்துவிட்டதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications