பாயிண்ட் விட்டுட்டு தப்பா பேசிய விஜய்? அதுவிடுங்க, பெரிய கட்சி எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு வருதா?
சென்னை: "திமுகவுக்கு தவெக எதிரி, எனக்கும் உனக்கும்தான் போட்டி" என்று சொல்வதெல்லாம் ஒரு கட்சியின் தலைவர் செய்ய வேண்டிய வேலைதான்.. ஆனால் அதற்கு பிறகு பாயிண்ட்டை பிடித்து பேசப்போகும்போது, யதார்த்தமும், உண்மையும் அதில் இருக்க வேண்டும். அல்லது உண்மைக்கு மாறான பேச்சாக அது இருந்திட கூடாது" என்று விஜய் பொதுக்குழுவில் பேசிய பேச்சு குறித்து கருத்து கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் லட்சுமணன்.
Marshal Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன், "அசாத்தியமான மவுனம், அதிர்ச்சி, துக்கம், போன்றவைகள் இருந்தாலும், கரூர் சம்பவம் நடந்து அடுத்த 10 நாட்களுக்குள் கட்சி வேலையை துவங்கியிருக்க வேண்டும்.

விஜய் முதலமைச்சர் வேட்பாளர்
ஆனால் 3 மடங்கு காலதாமதம் செய்துவிட்டு, வெளியே வருவதாலும், பொதுக்குழு என்பதால் கூட்டணியை பற்றி அறிவிக்கலாம் என்பதாலும், இந்த கூட்டத்துக்கான முக்கியத்துவம் கூடியது..
இந்த பொதுக்குழுவுக்கு முன்பே நிர்வாகக்குழு தவெகவில் கூடியது.. அந்த கூட்டம் முடிந்ததுமே நிர்மல் குமார் தந்த பேட்டியில், "ஒரு மாதத்துக்கு முன்பாக எடுத்த நாங்கள் எடுத்த அரசியல் நிலைப்பாட்டில் மாற்றமில்லை" என்று கூறியிருந்தார். இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில் விஜய்யின் ஒப்புதல் இல்லாமல் அந்த பேட்டியை நிர்மல் குமார் தந்திருக்க மாட்டார்..
அதிமுக - தவெக கூட்டணி
தற்போது நடந்த பொதுக்குழுவிலும் அதே விஷயத்தை, விஜய் அழுத்தம் திருத்தமாக சொல்லியது, நிலவிவந்த மிகப்பெரிய யூகங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளியாக வைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என்று சொல்வது போலவேதான் தவெகவிலும் சொல்கிறார்கள்.. எங்கள் தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் யார் வேண்டுமானாலும் தவெகவுக்கு வரலாம் என்கிறபோது, அங்கே அதிமுகவுக்கு இடமில்லை என்றாகிவிட்டது.
ஏற்கனவே தான்தான் முதலமைச்சர் என்று 170 தொகுதிகளில் பிரச்சாரத்தை செய்து முடித்துள்ள நிலையில், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று எப்படி அவரால் சொல்ல முடியும்?
பாயிண்ட்டை பிடிக்கலியே
உச்சநீதிமன்ற உத்தரவை வைத்து கொண்டு, மேடையில் விஜய் பேசியதில் தெளிவின்மை உள்ளது.. உச்சநீதிமன்றத்தில் எஸ்ஐடி ஏன் அமைத்தீர்கள் என்று கேட்டதற்கு திமுக வழக்கறிஞர்கள் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள் என்கிறார்..
திமுக வழக்கறிஞர்கள் மவுனமாகத்தான் இருப்பார்கள்.. ஏனென்றால் அவர்கள் கேட்டது திமுக வழக்கறிஞர்களை பார்த்து அல்ல,. எஸ்ஐடி அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.. அப்போதுகூட நீதிபதி பார்த்து இந்த கேள்வியை கேட்க மாட்டார்கள்.. சார்வு வக்கீலாக பதிவாளருக்காகத்தான் வந்து ஆஜராவார்கள்..
இந்த புரிதல்கூட விஜய்க்கு இல்லை.. அரசியல் புரிதல், சட்ட புரிதல் குறைந்தபட்சமாவது வேண்டும்தானே? எஸ்ஐடியை அமைத்தது தமிழக அரசு இல்லை, சென்னை ஹைகோர்ட் என்பதை விஜய்க்கு அவரது தரப்பில் புரிய வைத்திருக்க வேண்டும்.
திமுகவுக்கு தவெக எதிரி, எனக்கும் உனக்கும்தான் போட்டி என்று சொல்வதெல்லாம் ஒரு கட்சியின் தலைவர் செய்ய வேண்டிய வேலைதான்.. ஆனால் அந்த வேலையெல்லாம் செய்துவிட்டு, பாயிண்ட்டை பேசப்போகும்போது, யதார்த்தமும், உண்மையும் இருக்க வேண்டும். அல்லது உண்மைக்கு மாறான பேச்சாக இருக்கவே கூடாது.
வரம்பு மீறி பேசிய ஆதவ் அர்ஜூனா
லட்சக்கணக்கான இளைஞர்கள் நம்பியிருக்கும் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவராக உள்ள ஆதவ் அர்ஜூனா, வரம்பு மீறி பேசியிருக்க கூடாது.. செந்தில் பாலாஜி ரவுடி, நீங்களும் ரவுடி என்றால் அதை சட்டம் அனுமதிக்குமா? மக்கள் அதை எப்படி பார்ப்பார்கள்?
ஆதவ் மேடையில் அங்கு பேசும்போது, அதே நேரத்தில் அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி சென்னை ஹைகோர்ட்டில் வாதம் செய்து கொண்டிருந்தார்.. ஆதவ் அர்ஜூனா பதிவிட்ட ட்வீட்டை நீக்கிவிட்டதால், இந்த வழக்கு வேண்டாம் என்று நீதிமன்றத்தில் அவர் வாதாடி கொண்டிருந்தார்.
டெலிட் செய்த ட்வீட்
ஆதவ் அர்ஜூனா டெலிட் செய்த ட்வீட்டும் சரி, இப்போது பொதுக்குழு மேடையில் அவர் பேசிய பேச்சும்சரி, இரண்டிலுமே தூண்டிவிடுவது போலவே செய்துள்ளார்..
அதே தவறைதான் இப்போதும் செய்துள்ளார் ஆதவ் அர்ஜூனா. அப்படியானால் தவெக இளைஞர்களுக்கு அவர் சொல்ல வந்த மெசேஜ் என்ன? அவர்களை ரவுடியாக மாற சொல்கிறாரா? அல்லது தான் ரவுடியாக மாறினால், தனக்கு பின்னால் வந்து நில்லுங்க என்று சொல்ல விரும்புகிறாரா? இதுதான் இளைஞர்களுக்கு ஆதவ் அர்ஜூனா சொல்லித்தரும் பாடமா?
அதிமுக - எடப்பாடி பழனிசாமி
அதிமுகவை இடது கையில் வைத்துவிட்டு, அப்படியொரு கட்சியே இல்லை என்றெல்லாம் சுலபமாக தவெகவினர் பேசிவிட முடியாது..
அதேபோல, அதிமுகவினர் செய்த ஊழலை விஜய் சொல்லி காட்டுவதையும், அதிமுகவின் வாக்கு வங்கியை குறி வைத்து, கட்சி இன்று தகுதியற்றவர் கையில் உள்ளது என்பதை மறைமுகமாக விஜய் சொல்வதையும், எடப்பாடி பழனிசாமி மனதில் வைத்து, தேர்தலையும், கட்சியையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளார்..
பெரிய கட்சி வரப்போகுது, கூட்டணி பற்றி கவலைப்படாதீர்கள் என்று இனியும் சொல்லி கொண்டிருக்க முடியாது. எந்த பெரிய கட்சி அதிமுகவுக்கு இனி வரப்போகிறது? எனவே தன்னையும் ஏமாற்றிக்கொண்டு, தொண்டர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு











Click it and Unblock the Notifications