நொறுங்கிடுச்சே எடப்பாடி பழனிசாமி ஆசை? நயினார் நாகேந்திரனை சந்திக்க இதுதான் காரணமா? ஓபிஎஸ்ஸும் வர்றாரா
சென்னை: "ஓபிஎஸ், சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை.. மீண்டும் மீண்டும் அதையே கேட்காதீர்கள், அரைத்த மாவையே அரைக்காதீர்கள், இத்துடன் 50 முறை சொல்லிவிட்டேன்" என்று நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் காட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.. சீட் எண்ணிக்கை,, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் நிலையில், ஓபிஎஸ் விஷயமும் இன்றைய தினம் பேசப்படுமா? என்ற ஆர்வமும் எகிறி உள்ளது
தமிழக சட்டப்பேரவை தேர்தல் மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வாக உருவெடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி உறுதி செய்திருந்தாலும், தற்போது நடக்கும் சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகள் கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன. திமுக பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதால், அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிக்காக திட்டமிட்டுள்ளது.

அமித்ஷா புதுக்கோட்டை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுக்கோட்டை வந்தபோது எடப்பாடி பழனிசாமி நேரடியாக சந்திக்கவில்லை. ஆனால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 முறை அமித்ஷாவை சந்தித்து, தேர்தல் தொகுதிகள் மற்றும் பங்கீடு குறித்து ஆலோசனை செய்தார்.
குறிப்பாக, பாஜகவுக்கான 50-க்கும் மேற்பட்ட தொகுதிகள் பட்டியலாக வழங்கப்பட்டதாகவும், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் நடந்தது.
எடப்பாடி பழனிசாமி
ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர முடியாது என்று திட்டமாக சொல்லிவிட்டார்..
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணியில் அன்புமணி தரப்பிலான பாமக நேற்று முன்தினம் இணைந்தது. இதன் மூலம் கூட்டணி மேலும் வலுப்பெற்று, எதிர்கால தேர்தலில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லி சென்று சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிசாமி,, அப்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணிக் குறித்த ஆலோசனைகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி
இந்த சந்திப்புக்கு பிறகு டெல்லி ஏர்போர்ட் வந்த எடப்பாடி பழனிசாமியிடம் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் மீண்டும் சேர்க்க போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவர் பதிலளித்து, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் சேரும்; அதனை வெளிப்படையாக இப்போது சொல்ல முடியாது. சேரும்போது உங்களை அழைத்து அறிவிப்போம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர வாய்ப்பு இல்லை" என்றார்.
இதன் மூலம், டிடிவி தினகரனுக்கு அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது, ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சேர முடியாது என்பதை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்ட முறையில் தெரிவித்தார்.
அதாவது டிடிவி தினகரனுக்கு நேரடி மறுப்பு சொல்லப்படவில்லை. தற்போதைய நிலையில், டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணியில் இறங்கி வந்து, அவர்களது நிலை தெளிவாக அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக ஏற்கனவே இருப்பதால், இணைவதற்கு முன் சூழல் முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரன்
இதனிடையே நேற்றிரவு டெல்லியில் இருந்து வந்த அழைப்பின்பேரில் , கிளம்பி சென்றார் டிடிவி தினகரன்.. அப்போது அமித்ஷாவை நேற்றிரவு சந்தித்து பேசியதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இடம் பெற்று அமித்ஷா உறுதி தந்ததாகவும் தெரிகிறது.. மேலும் சீட் விவகாரமும் பேசப்பட்டதாக தெரிகிறது.
இதனால் கிட்டத்தட்ட அமமுக கூட்டணிக்குள் வந்துள்ள நிலையில், ஓபிஎஸ்ஸையும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர திட்டமிடுவதாக தெரிகிறது.. முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டுமானால் ஓபிஎஸ்ஸும் பாஜகவுக்கு தேவையாக உள்ளது..
ஓபிஎஸ் வாக்கு வங்கி
அதுமட்டுமல்ல, கடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சையாக நின்று மூன்றரை லட்சம் வாக்குகளை பெற்றார்,.. இத்தனைக்கும் 20 நாளைக்கு முன்புதான் அவரை வேட்பாளராக அறிவித்தார்கள்.. பலாப்பழம் சின்னமும் மக்களுக்கு அப்போது அறிமுகமில்லை..
அத்துடன், பன்னீர்செல்வம் என்ற பெயரில் பல சுயேட்சைகளையும் இறக்கி குழப்பத்தை உண்டு பண்ணினார்கள்.. அப்படியிருந்தும் 3 லட்சத்து 36 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றிருந்தார் ஓபிஎஸ்.. எனவே, அந்த வாக்குகளை இழக்க பாஜக தயாராக இல்லை. எனவேதான் எடப்பாடியை சமாதானப்படுத்தும் முயற்சியை, நயினார் நாகேந்திரன் மூலம் தொடர்வதாக தெரிகிறது..
எடப்பாடி வீட்டில் சந்திப்பு
இதன் தொடர்ச்சியாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இன்று காலை 9 மணிக்கு எடப்பாடியை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என்றும் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த சந்திப்பு நடந்துள்ளது.
முக்கியமாக, 56 சீட், அமைச்சரவையில் 3 இடம் உள்ளிட்ட விவகாரங்கள் இன்று மீண்டும் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது.. அதேபோல, தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை எடப்பாடி பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் கேட்டதாகவும் தெரிகிறது..
எனினும், இந்த தொகுதி பங்கீடு என்பது, ஒரே நாளில் சுமூக முடிவை தந்துவிடாது என்பதால் இரு தரப்பிலுமே தொகுதி பங்கீட்டுக் குழு, நியமிக்கப்பட்டு இறுதி முடிவு எட்டப்படும் என்கிறார்கள்..
ஒரே மேடையில் பல தலைவர்கள்
அதேபோல கூட்டணியில் மேலும் சில கட்சிகளைக் கொண்டு வருவது, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதற்கு முன்னதாக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர செய்து பிரச்சாரம் செய்வது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன..
ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்றைய தினம் நடத்தப்படும் பேச்சுவார்த்தை அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது..!!
-
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications