ஜாக்கிரதை! சாப்பிட்ட உடனே ஜிம் போகவே கூடாது.. எவ்வளவு நேரம் கழித்து ஜிம் செல்லலாம்! மருத்துவர் தகவல்
சென்னை: ஜிம் செல்லும் பலருக்கும் இரவு டின்னருக்கு பிறகு ஜிம் செல்லலாமா.. அதனால் எதாவது பிரச்சனை ஏற்படுமா என்ற சந்தேகம் இருக்கவே செய்கிறது. இந்தக் கேள்விக்கு மருத்துவர் ஒருவர் விளக்கமளித்துள்ளார். இரவு உணவுக்குப் பிறகு ஜிம் செல்லலாமா.. சாப்பிட்டு முடித்து எத்தனை மணி நேரம் கழித்து ஜிம் செல்லலாம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் நிலையில், பலரும் ஜிம் செல்ல ஆரம்பிக்கிறார்கள். அதேநேரம் காலை முதல் வேலையில் பிஸியாக இருப்போர் பலரும் மாலை நேரத்திலேயே ஜிம் செல்வார்கள். அதிலும் சிலர் இரவு டின்னரை முடித்துக் கொண்டு கூட ஜிம் செல்வார்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் வேலையில் சிக்கிக் கொள்வோர் பொதுவாக இதுபோல டின்னர் முடித்துக் கொண்டு இரவு நேரங்களில் ஜிம் செல்வார்கள்.

ஜிம்
இரவு டின்னருக்கு பிறகு ஜிம் செல்வது நல்லதா அல்லது உடல்நிலை ஆபத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதற்கிடையே தானேவை சேர்ந்த எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அகர்வால் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர், "உடலால் செரிமானத்தையும் உடற்பயிற்சியையும் ஒரே நேரத்தில் கையாள முடியாது. இரவு டின்னர், அதிலும் சற்று ஹெவியாக டின்னர் சாப்பிட்டு இருந்தால் உணவின் செரிமானத்திற்கு அதிக ரத்த ஓட்டம் வயிற்றுக்குப் பாயும். அந்த நேரத்தில் போய் நாம் உடற்பயிற்சி செய்தால் ரத்தம் தசைகளுக்குச் செல்ல ஆரம்பிக்கும். அதுபோன்ற சூழல்களில் செரிமானம் தாமதமடைந்து, அசௌகரியங்கள் ஏற்படும்" என்றார்.
என்ன பிரச்சனை
இதுபோல டின்னருக்கு பிறகு ஜிம் சென்றால் வயிற்றில் bloating ஏற்படுவது பொதுவான பிரச்சனை. ஹெவி டின்னருக்கு பிறகு உடற்பயிற்சி செய்யும்போது வயிற்றுப் பிடிப்புகள், குமட்டல், தலைச்சுற்றல், அசிடிட்டி கூட ஏற்படும்.. இதன் காரணமாக நம்மால் ஜிம்மில் உடற்பயிற்சி கூட முறையாகச் செய்ய முடியாது. உடற்பயிற்சி திறனை நேரடியாகப் பாதிக்கின்றன. ஜிம்மிற்கு போன பிறகும் செரிமானப் பிரச்சனைகளால் அவதிப்படுவோம்.
உணவு வகைகள்
கொழுப்பு நிறைந்த உணவுகள், பொரித்த அல்லது அதிகப் புரதம் கொண்ட உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும் என்கிறார் டாக்டர் அகர்வால். அவற்றைச் சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்தால், செரிமானச் செயல்முறை பாதிக்கப்பட்டு அசிடிட்டி ஏற்படும். இது ஆற்றல் எனர்ஜி அளவை குறைத்து, உடற்பயிற்சியை வழக்கத்தை விடக் கடினமாக்கும்.
எனவே, ஜிம் செல்லும் நேரமும் மிகவும் முக்கியம். டின்னர் என இல்லை எந்தவொரு உணவுக்குப் பிறகும் 2 முதல் 3 மணி நேரம் காத்திருப்பது நல்லது. இது உணவைச் செரிமானம் செய்து, ரத்த ஓட்டத்தை நிலைப்படுத்த உடலுக்குப் போதுமான நேரம் அளிக்கும். அதன் பிறகு ஜிம் சென்றால் மிகச் சிறப்பாக உடற்பயிற்சி செய்ய முடியும்.
எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்
மேலும், உணவின் வகையைப் பொறுத்தும் எவ்வளவு நேரம் நாம் காத்திருக்க வேண்டும் என்பது மாறுபடும். பழங்கள், டோஸ்ட், ஓட்ஸ் போன்ற கார்போஹைட்ரேட் அடிப்படையிலான லேசான உணவுகள் வேகமாகச் செரிமானம் ஆகும். இதுபோன்ற உணவுகளைச் சாப்பிட்டால் 60 முதல் 90 நிமிடங்களுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யலாம். ஜிம்மிற்கு முன் இலேசான இரவு உணவை எடுத்துக் கொண்டு, ஹெவி உணவுகளை உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் ஏற்படும் அசவுகரியத்தைத் தவிர்க்கலாம்.!
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இரவு உணவுக்குப் பிறகு ஜிம் செல்வது பாதிப்பை ஏற்படாது. ஆனால் ஹெவி உணவை உண்டவுடன் உடற்பயிற்சி செய்வது செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே, டின்னஜ் சாப்பிட்ட பிறகு 2 முதல் 3 மணி நேரத்திற்குப் பிறகு ஜிம் செல்வது சரியாக இருக்கும்!
இது சாதாரணச் செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உடல்நிலை பாதிப்பு எதாவது ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications