Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்த படத்திற்கே குரல் தரலைன்னா.. மக்களுக்கு எப்படி குரல் தருவாரு? விஜய் மீது கடுப்பில் தவெக தலைகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது அவரின் சொந்த ரசிகர்களே கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் வெளியீடு தொடர்பாக அவர் எதுவும் பேசாதது விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளதாம்.

நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்தது. படத்திற்கு தணிக்கை கிடைக்காத காரணத்தால் தற்போது வெளியீடு தள்ளிப்போய் உள்ளது. ஜனநாயகன் பட வெளியீட்டைத் தேதி குறிப்பிடாமல் தயாரிப்பாளர்கள் தள்ளி வைத்துள்ளனர்.

Vijay tvk jananayagan

இதற்கு விஜய் இதுவரை குரல் எதுவும் கொடுக்கவில்லை. தன்னுடைய படத்திற்கு திடீரென்று வெளியீடு மறுக்கப்படுகிறது என்பதை பற்றி பேசாமல் அவர் மௌனம் காத்து வருகிறார். முக்கியமாக இதில் மத்திய அரசு அழுத்தங்கள் இருப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் அது எதையும் பற்றி விஜய் பேசவில்லை.

1. படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளது.. அதனால் ரசிகர்கள் அமைதி காக்கவும் என்று விஜய் சொல்ல இருக்கலாம்.. சொல்லவில்லை.

2. படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் வர என்ன காரணம்.. யார் காரணம் என்று பேசி இருக்கலாம் பேசவில்லை.

3. படம் ரிலீஸ் ஆவதற்கு பின் உள்ள அரசியலை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் செய்து இருக்கலாம் செய்யவில்லை.

விஜயின் இந்த மௌனம்தான் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளதாக கூறப்படுகிறது. சொந்த படத்திற்கே கருத்து சொல்லாதவர்.. எப்படி மக்கள் பிரச்சனைகளுக்கு களத்திற்கு வருவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விஜயின் கடைசி படம் இது.. அதற்கு சிக்கல் ஏற்படும் போது துணிச்சலாக பேச வேண்டியது விஜயின் கடமை. இப்போதும் கூட தலைவா பட காலம் போல அமைதியாக இருப்பது எப்படி சரியாகும் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ்

இப்படிப்பட்ட நிலையில்தான் ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. விஜயை விட காங்கிரஸ் இதில் அதிகம் பேசி உள்ளது. திரையுலகமே பெரிதாக விஜயை ஆதரிக்காத நிலையில்.. காங்கிரஸ் இதில் விஜய்க்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கொந்தளித்த காங்கிரஸ்

அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.

மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்ம் என்று கூறி உள்ளது.

ஆனால் காங்கிரஸ் பேசிய அளவிற்கு கூட விஜய் பேசவில்லை என்பதுதான் விஐய் ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+