ஜனநாயகன் படத்திற்கு வசனம் எழுதிய விஜய்.. டிரெய்லரில் இதை கவனிச்சீங்களா.. பீதியில் தளபதி ரசிகர்கள்!
சென்னை: ஜனநாயகன் படத்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வசனம் எழுதி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனநாயகன் படத்தின் பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள கிரெடிட்டில் வசனம் எழுதியவரின் பெயராக தளபதி விஜய் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று வெளியான ஜனநாயகன் டிரெய்லரிலும் வசனம் என்று விஜய் பெயர் எழுதப்பட்டு, பின் நீக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியாகியது. தெலுங்கு படமான பகவந்த் கேசரி படத்தை தழுவி ஜனநாயகன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதையை அப்படியே வைத்துக் கொண்டு கொஞ்சம் அரசியலை புகுத்தி இருக்கிறார்கள். விஜய்யின் கடைசி படம் என்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் விஜய் தளபதி வெற்றிக் கொண்டான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய்யுடன் மமீதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி டியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியான ஒரு நாளிலேயெ சுமார் 30 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
அதேபோல் ஜனநாயகன் படத்திற்கு தெலுங்கு மற்றுன் இந்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் வசனங்களை விஜய் எழுதி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கேற்ப நேற்று வெளியான டிரெய்லரின் டிஸ்க்ரிப்ஷனில் வசனம் தளபதி விஜய் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் சில மணி நேரங்களிலேயே வசனம் விஜய் என்பது நீக்கப்பட்டது.
ஆனால் ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல்களின் எழுதப்பட்டுள்ள டிஸ்க்ரிப்ஷனிலும் வசனம் தளபதி விஜய் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விஜய் படங்களுக்கு விஜய் வசனம் எழுதியதே கிடையாது. சில ஆங்கிலப் படங்களை பார்த்து, அதே போன்ற படத்தை எடுக்க முடியுமா என்று மட்டுமே இயக்குநர்களிடம் கேட்பார் என்று சினிமா தொழிலாளர்கள் மத்தியில் பேசப்படும்.
ஆனால் நேரடியாக விஜய் ஜனநாயகன் படத்திற்கு வசனம் எழுதி இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகளை விமர்சிக்கும் ஏராளமான வசனங்கள் இடம்பெற்றிருப்பதால், விஜய் அவரது குழுவினரை வைத்தே எழுதி இருப்பார் என்றும் விவாதம் தொடங்கி இருக்கிறது.
-
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications