Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jana Nayagan: அனிருத் மசாலாவை தூவி..பகவந்த் கேசரியை கிண்டி வைத்த ஹெச்.வினோத்! கொண்டைய மறந்துட்டாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலரை நேற்று பட குழு வெளியிட்டது. பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என சொல்லப்பட்டுவரும் நிலையில் படத்தின் வெளியீட்டு விழாவின் போது அது முழுக்க முழுக்க தளபதி படம் எனக் கூறியிருந்தார் ஹெச். வினோத். இந்த நிலையில் படத்தின் டிரைலர் பெரும்பாலும் பகவந்த் கேசரி படத்தின் காட்சிகளை ஒத்து இருப்பதால் நிச்சயம் அது அந்த படத்தின் ரீமேக் தான் என நெட்டிசன்கள் டிகோட் செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும் போது அதனை விட்டு விட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்த அவர், அந்த அறிவிப்பிலேயே தனது கடைசி படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலுக்கு வருவேன் எனக் கூறியிருந்தார்.

அரசியலுக்கு வந்த பிறகு அவரது 'கோட்' திரைப்படம் வெளியான நிலையில், தற்போது கடைசி படமாக ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார். கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

Jana Nayagan vijay cinema

ஜனநாயகன் ட்ரெய்லர்

விஜய்யுடன் பாபித்தியோள் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு பல அனல் பறக்கும் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். படம் ஒன்பதாம் தேதி பொங்கல் விடுமுறை குறிவைத்து களமிறங்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

விஜய் கடைசி படம்

2 நிமிடம் 52 நொடிகள் கொண்ட ட்ரெய்லரின் ஆரம்பமே அரசியல் பஞ்ச்சோடு ஆரம்பித்தது, டிவிகே எனக் குறிக்கும் வகையில் 'தளபதி வெற்றி கொண்டான்' என்ற பெயருடன் விஜய் நடித்திருக்கிறார். ராணுவத்தில் சேர பயப்படும் தனது மகளை பாதுகாக்கும் விஜய், எதிரிகள் மூலமும் அரசியல்வாதிகள் மூலமும் என்ன மாதிரியான நெருக்கடிகளை எதிர்கொள்கிறார் என்பது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த படம் தொடங்கிய போது இருந்தே தெலுங்கில் 'பாலையா' பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் கதையின் ரீமேக் தான் என சொல்லப்பட்டது.

ஹெச்.வினோத்

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஹெச்.வினோத், இது அந்தப் படமா? இந்த படமா? என குறுக்க வருகிறார்கள். இது முழுக்க முழுக்க தளபதி படம் என சொல்லி இருந்தார். இந்த நிலையில் படத்தின் டிரைலர் மூலம் அது பகவந்த் கேசரியின் ரீமேக் தான் என்பதை டீகோட் செய்துள்ளனர் நெட்டிசன்கள். படத்தில் ஆக்சன் காட்சிகளில் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் பகவந்த் கேசரியை போலவே இருக்கிறது. மேலும் மமீதா பைஜூவுக்கு விஜய் பயிற்சி கொடுப்பது ராணுவத்தில் சேர கையெழுத்திட சொல்வது என பகவன் கேசரியில் இடம் பெற்ற காட்சிகள் பெரும்பாலும் ஜனநாயகன் படத்திலும் இடம் பெற்றுள்ளது.

பகவந்த் கேசரி ரீமேக்

இதன் மூலம் அந்தப் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என்பதும் உறுதியாக இருப்பதாக சொல்கின்றனர் நெட்டிசன்கள். அதே நேரத்தில் ஏற்கனவே சில ரீமேக் படங்களை கட்சி வினோத் இயக்கி இருக்கும் நிலையில் லாஜிக் மீறல்கள் இல்லாமல் சமூக கருத்துகளுடன் விஜய்க்கு இந்த படத்தை தருவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதே நேரத்தில் பகவந்த் கேசரியில் அனிருத் என்ற மசாலாவை தூவி ஜனநாயகனாக சமைத்து இருக்கிறார் ஹெச்.வினோத் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+