“திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையா?" ராமதாஸ் சொன்ன பதில்.. மிரளும் அதிமுக!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் 3 எம்.எல்.ஏக்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "திமுக உடன் கூட்டணியா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து முடிவு செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அண்மையில் பாமக தலைவர் அன்புமணி நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் அதிமுக - பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இருக்கும் எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர்க்கப்படும். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி." எனத் தெரிவித்தார்.

ஆனால், இந்த கூட்டணியை ஒரு நாடகம் என விமர்சித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். தானே அக்கட்சியின் நிறுவனர் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தன்னுடைய தலைமையில்தான் கூட்டணி குறித்து பேச முடியும் என்றும் தான் அமைக்கும் கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். அன்புமணி கூட்டணி பேசியிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏக்களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து பாமக வெளியேறுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இந்தக் கூட்டணி தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடிப்பதால், பாமகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ராமதாஸ், "திமுகவுடன் கூட்டணி என்றும் கூற முடியாது, கூட்டணி இல்லை என்றும் கூற முடியாது" என்று பதில் அளித்தார். திமுக கூட்டணி பேச்சுவார்த்தை பரிசீலனையில் உள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "ஆமாம்" எனத் தெரிவித்தார்.
உங்களுடைய விருப்பம் என்ன? என்.டி.ஏ கூட்டணியில் இருந்து இல்லை என்பது குறித்து நீங்கள் முடிவு எடுத்துவிட்டீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், "இது இன்னும் முடிவு எடுக்கவில்லை. நாட்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது; விரைவில் முடிவு எடுப்போம்." என்றார்.
புதிய கூட்டணிக்கு போவதற்கான சூழல் உருவாகியுள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். தேர்தல் நேரத்தில் எதையும் உறுதிபட சொல்ல முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதில் பாமகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்தக் குழப்பம் பாமகவின் வாக்கு வங்கியை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அதிமுக கூட்டணிக்கு வாக்குகளை ஒருங்கிணைப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.
-
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications