“உறவு முறிந்தபின் தகராறு எழுந்தால் குற்றவியல் வழக்கு தொடுப்பது சரியல்ல”.. ஐகோர்ட் கிளை அதிரடி!
மதுரை: "திருமணத்திற்கு முன்பு இருவரும் சம்மதத்துடன் உடல் உறவு கொண்டு, உறவுகள் முறியும்போது தகராறு எழுந்தால் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என குற்றவியல் வழக்கு தொடுப்பது ஏற்புடையதல்ல." என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
குற்றவியல் சட்டம், உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்ப்பதற்கான வழிமுறை அல்ல என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என தொடப்படும் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில், ஐகோர்ட் மதுரை கிளை இவ்வாறு கூறியுள்ளது.

பலமுறை உறவு வைத்துக் கொண்ட பின் திருமணம் செய்ய மறுப்பதாக திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில் இளைஞர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து அந்த இளைஞர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதி, "தனிப்பட்ட உறவு தகராறுகளில் குற்றவியல் சட்டம் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்துள்ளதை சரிபார்க்க வேண்டும். இருவர் உறவு சம்மதத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டு உறவு முறிந்த பின் தகராறு எழுந்தால் குற்றவியல் வழக்கு தொடர இயலாது.
தனிப்பட்ட அல்லது உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. சமகாலத்தில் சமூகத்தில் தனிப்பட்ட உறவுகளின் மாறிவரும் வரையறையை ஒப்புக்கொள்வதற்காக கருத்து முன்வைக்கப்படுகிறது.
தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ, தனிப்பட்ட ஏமாற்றத்தை குற்றவியல் செயல்முறை வழக்காகவோ மாற்ற முடியாது. வற்புறுத்தல், ஏமாற்றுதல், இயலாமையால் சம்மதம் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது.
இருவர் தங்கள் சம்மதத்துடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு தகராறு என்றவுடன் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவதா? தனிப்பட்ட முரண்பாட்டை தவறான நடத்தை என்று சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க தனிமனிதருக்கு எதிராக வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம் எனக் கருத்து தெரிவித்தார்.
மேலும், பல ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்தது இணைய உரையாடல்கள் மூலம் தெளிவாகி உள்ளதால் இளைஞர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications