பராசக்தியில் விழுந்த 25 வெட்டு! "தீ பரவட்டும்" கூட தப்பவில்லை! என்னென்ன வார்த்தைகள் கட்? லிஸ்ட் இதோ
சென்னை: பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிகழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் 25 இடங்களில் வெட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.அறிஞர் அண்ணாவின் புத்தகத்தின் தலைப்பான தீ பரவட்டும் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது. இதனால் 16 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே இந்த படத்தை பார்க்க அனுமதிக்கப்படுவர்.
பராசக்தி படம் நாளை ரிலீஸாகும் நிலையில் இன்று காலை வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. இதனால் ஜனநாயகனை போல் இந்த படமும் திட்டமிட்டபடி வெளியாகாதா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் இன்று பகல் 12.30 மணிக்கு பராசக்திக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.
பராசக்தி படம் மொழி பிரச்சினை குறித்து பேசம் படமாகும். இது 1960களின் காலகட்டத்தில் நடந்த பிரச்சினைகள் குறித்து பேசுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சென்சார் எங்கெல்லாம் சீன்களை கட் செய்திருக்கிறது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
மொத்தம் 25 காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 52 வினாடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. 27 வினாடி காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. எந்த சீன்களும் சேர்க்கப்படவில்லை.

அப்படி என்னென்ன வார்த்தைகளை கட் செய்தது என்பதை பார்க்கலாம். மற்ற நாடுகளில் மொழியை திணிப்பது குறித்த காட்சியில் குரலின் ஏற்ற இறக்கம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அதன் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
தீ பரவட்டும் என்ற வசனம் நீதி பரவட்டும் என மாற்றப்பட்டுள்ளது. தீ பரவட்டும் என்பது அண்ணா எழுதிய புத்தகத்தின் தலைப்பாகும். அது போல் பட்டு நூலா என்ற வார்த்தை மாற்றப்பட்டுள்ளது. சிறுக்கி, கொடில காய வச்ச துணி மாதிரி, இந்தி கத்துக்கிட்டு, வர சப்பாத்தி, நொட்றான், கொல்டி போன்ற வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன.
அது போல் தீக்குளித்து தற்கொலை செய்யும் சம்பவத்தில் காட்சிகள் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. "இந்தி என் கனவை அழித்தது" என்ற டயலாக், "என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது" என்று மாற்றப்பட்டுள்ளது. கிராமங்களில் நடத்தப்பட்ட படுகொலை காட்சிகளும் மாற்றப்பட்டுள்ளன.
அது போல் இந்தி அரக்கன் என கூறி ஒரு உருவபொம்மை எரிப்பு காட்சிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் தபால் நிலையத்தின் பெயர் பலகையில் மாட்டு சாணம் பூசும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தி மொழிக்கு எதிரான subtitles நீக்கப்பட்டுள்ளன. இவை தவிர நிறைய கெட்ட வார்த்தைகளும் மியூட் செய்யப்பட்டுள்ளன.
வெட்டுகள் போக இந்த படத்தின் மொத்த நேரம் 162.43 நிமிடங்களாகும். அதாவது இரண்டரை அல்லது இரண்டே முக்கால் மணி நேரம் இந்த படம் திரையிடப்படுகிறது. தீ பரவட்டும் என்ற நூல் அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் சமூக நீதிக்கான குரல், சமுதாய மாற்றத்திற்கான புரட்சிகர சிந்தனைகள், இலக்கிய விமர்சனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். இது அவருடைய முக்கியமான நூலாகும். இதில் தமிழர்களின் உணர்வுகளை எழுப்பும் கருத்துகளும் அடங்கியுள்ளன. இந்த புத்தகம் 1953 ஆம் ஆண்டு வெளியானது. மொத்தம் 83 பக்கங்களை கொண்டது. இந்த புத்தகத்தின் முகப்பிலேயே நெருப்பு சுவாலைகள் பறப்பது போன்று படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications