காங்கிரஸ் போடும் கணக்கு.. காத்திருக்கும் தவெக.. அமமுகவுக்கு பிடிகொடுக்காத விஜய்.. பின்னணியில் என்ன?
சென்னை: தவெக தரப்பில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், விஜய் பல்வேறு கணக்குகளை போட்டுள்ளதாக தெரிகிறது. ஒருவேளை ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமையவில்லை என்றால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம் என்று விஜய் ஆலோசனை செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம், உட்கட்சி பூசல், வேட்பாளர்கள் தேர்வு என்று திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு அணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம் தவெக கரூர் சம்பவத்திற்கு பின் பெரிதாக எந்தப் பணிகளையும் செய்யவில்லை.

SIR நடவடிக்கையை கண்காணிப்பதற்கு கூட தவெகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளை களத்தில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கூட்டணியை இறுதி செய்வதில் மும்முரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு பேட்டிகளில் சிக்னல் கொடுத்துவிட்டார்.
ஆனாலும் இதுவரை அமமுக - தவெக இடையில் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை. இதற்கு விஜய்யின் கணக்கு தான் காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் விஜய் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
கரூர் விவகாரத்தில் விஜய்யுடன் தொலைபேசியில் ராகுல் காந்தி உரையாடிய பின்னரே, இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. பாஜகவை கொள்கை எதிரியாக தவெக அறிவித்துவிட்ட சூழலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விஜய் விரும்பி இருக்கிறார். அரசியல் ஆசை வந்த போதே டெல்லி சென்று ராகுல் காந்தியை ஒருமுறை விஜய் சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்துவிட்டு வந்தார்.
தற்போது ஆட்சியில் பங்கு என்று ஆசையை விஜய் தமிழக அரசியல் கட்சிகள் முன்னிலையில் வைத்திருக்கிறார். இதனை காங்கிரஸ் கட்சியும் கெட்டியாக பிடித்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. பீகார் தேர்தல் முடிவை பொறுத்தே கூட்டணி கணக்குகளை எடுக்க ராகுல் காந்தி ஆயத்தமாகி வருகிறார்.
பீகாரில் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைக்கலாம் என்றும், ஒருவேளை என்டிஏ கூட்டணி வென்று நிதிஷ் குமார் முதல்வராக நியமனம் செய்யப்படவில்லை என்றால், சர்ச்சைகள் எழும். அப்போது நாடாளுமன்றத்தில் 22 எம்பிக்களை வைத்து திமுகவின் தேவை காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் அவசியமாக இருக்கும்.
இதனால் தவெக தலைவர் விஜய்யை சில காலம் காத்திருக்க காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தவெக தலைவர் விஜய் அமமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்காலம் இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைந்தால், திமுக கூட்டணியில் இருந்து இன்னும் சில கட்சிகளை இழுக்க முடியும் என்று விஜய் நம்புவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
ஆதவ் ஆர்ஜுனாவின் மாஸ்டர் பிளான்.. வில்லிவாக்கத்தை குறிவைத்தது ஏன்? திமுக அதிமுகவுடன் நேரடி போட்டி -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications