கரூர் சம்பவம் குறித்து விசாரணை! கரெக்ட் டைமுக்கு முன்னதாகவே.. சிபிஐ முன் ஆஜராகும் விஜய்!
சென்னை: கரூர் நெரிசல் பலி தமிழகத்தையே உலுக்கியிருந்தது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ தனது விசாரணையை தொடங்கியிருக்கிறது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக விஜய் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செப்.27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில், விஜய் பரப்புரையை மேற்கொண்டிருந்தார். இந்த பரப்புரையில் விஜய்யை பார்க்க கூட்டம் அளவுக்கு அதிகமாக கூடியது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரச்சாரத்தில் தாமதம்
இந்த உயிர் பலி குறித்து, விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, விஜய் பரப்புரையில் பங்கேற்ற நேரம் குறித்து சர்ச்சை எழுந்தது. செப்.27ம் தேதி இரண்டு இடங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் காலை 8 மணிக்கு பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்னையிலிருந்தே 8 மணிக்குதான் விஜய் புறப்பட்டிருந்தார். எனவே திட்டமிட்டதை விட நீண்ட நேரம் தாமதமாகத்தான் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
நாமக்கல்லில் பதற்றம்
எனவே நாமக்கல்லில் பதற்றமான சூழல் உருவாகியிருந்தது. அங்கேயே பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆனால், நல்வாய்ப்பாக அப்படி ஏதும் நடக்கவில்லை. சிலர் மயக்கமடைந்து விழுந்த நிலையில், அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இதனையடுத்து கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
கரூரில் பலி
மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை, கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தவெக வழங்கிய அனுமதி கோரிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதியம் 12 மணிக்கு விஜய் வருவார் என்று தவெக நிர்வாகிகள் தங்கள் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருந்தனர். எனவே கூட்டம் 12 மணிக்கு முன்னதாகவே கூட தொடங்கியது. நாமக்கல்லில் இருந்து கரூர் பைபாசுக்கு வர 45 நிமிடங்கள்தான் ஆகும். ஆனால், விஜய் இந்த பயணத்தை பல மணி நேரம் நீடித்தார் என விமர்சனங்கள் எழுந்தன.
இப்படியாக கடைசியில் விஜய் இரவு 7 மணிக்கு கரூர் வந்தடைந்தார். இந்த தாமதம் காரணமாக, நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். இதனால் விஜய் வந்தபோது அவரை பார்க்க முந்தியடித்தனர். இதில் உருவான நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டது.
விசாரணைக்கு ஆஜர்
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. காலை 11.30க்கு விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக காலை 6.30 மணிக்கு பனையூர் இல்லத்திலிருந்து விமான நிலையம் புறப்பட்டிருக்கிறார். சரியாக 7.05 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு 9 மணிக்குள் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த பயணம் பனி மூட்டம் காரணமாக 15-20 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது.
சரியான நேரத்தில் ஆஜர்
இருப்பினும், காலை 9.30-10 மணிக்கெல்லாம் டெல்லி விமான நிலையம் ரீச் ஆகும் விஜய், அங்கிருந்து 15 நிமிடத்திற்குள் டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று, சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, சரியான நேரத்திற்கு முன்பாகவே டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகிறார்.
விசாரணைக்கு மட்டும் சரியான நேரத்திற்கு ஆஜராகும் விஜய், ஏன் பிரச்சாரத்திற்கு மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன்












Click it and Unblock the Notifications