Jana nayagan: சென்சார் சான்றிதழ் வாங்காம ரிலீஸ் தேதியை எப்படி அறிவிச்சீங்க? ஐகோர்ட் சரமாரி கேள்வி!
சென்னை: "2 நாட்களில் முடிவெடுக்கும் அளவுக்கு என்ன அவசரம்? சான்றிதழ் இல்லாமல் படத்தை எப்படி வெளியிடுவீர்கள்? சென்சார் சான்றிதழ் வருவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை எப்படி நிர்ணயிக்க முடியும்?" என ஜனநாயகன்' திரைப்பட தணிக்கை சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்தப் படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தணிக்கை குழு உறுப்பினர் புகார் அளித்தார். இதனால் ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிடி ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் நீதிபதி பிடி ஆஷாவின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்தது. சென்சார் போர்டு சார்பாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா அமர்வு முன்பாக ஆஜராகி முறையிட்டார். நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, விசாரிப்பதாகத் தெரிவித்தார். அதன்படி, இன்று மாலை ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் விசாரணை நடைபெற்றது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்த்வா, நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது.
வழக்கு விசாரணையின்போது, மனுவில் கோரப்படாத நிவாரணத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு தனி நீதிபதி அளித்துள்ளார் என தணிக்கை வாரியம் தரப்பு வாதம் வைத்தது. மேலும், சென்சார் போர்டு பதில் அளிக்க கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதி, சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தை ஏன் அவசரப்படுத்துகிறீர்கள்..? படக்குழு 15 நாள் காத்திருந்தால் என்ன பிரச்சனை? சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன்? நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என தலைமை நீதிபதி அமர்வு, ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தரப்புக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவீர்களா? 2 நாட்களில் முடிவெடுக்கும் அளவுக்கு என்ன அவசரம்? சான்றிதழ் இல்லாமல் படத்தை எப்படி வெளியிடுவீர்கள்? சென்சார் சான்றிதழ் வருவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை எப்படி நிர்ணயிக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பல்வேறு நடைமுறைகள் இருக்கும்போது தணிக்கைச் சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம். வழக்கு தொடர்ந்த மறு நாள் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தனி நீதிபதி எப்படி உத்தரவு பிறப்பித்தார்? சென்சார் போர்டு பதில் அளிக்க அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து, 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை? அவசர முறையீட்டில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்ட கேள்வி! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications