Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலை முதலே பரபரப்பு.. மொத்தமாக முடங்கிய டெல்லி ஏர்போர்ட்! 100+ விமான சேவை பாதிப்பு! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை எதிர்பாராத விதமாகத் திடீர் குழப்பம் ஏற்பட்டது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 100+ விமானங்கள் தாமதம் ஆகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் விமானச் சேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகரங்களுக்கு இடையே விமானத்தில் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விமானச் சேவை இப்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Delhi Airport Chaos Over 100 Flights Delayed by Air Traffic Control Glitch ATC s AMSS Failure Hits

ஏடிசி எனப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. இதனால் டெல்லி ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானச் சேவைகளில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு வருத்தம் தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள், கோளாறை சரிசெய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஏடிசி அமைப்பில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக விமான சர்வீஸில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சிக்கலை விரைந்து சரிசெய்யத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் தாமதம் ஆனது என்பது குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள, பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஏஎம்எஸ்எஸ் எனப்படும் Automatic Message Switching Systemல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த இடையூறுகள் நேர்ந்துள்ளன.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாட்டிலேயே பரபரப்பான விமான நிலையம் ஆகும். தினசரி சுமார் 1,550 விமானங்களைக் கையாள்கிறது. கடந்த வாரம் கூட, ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் சிக்கல் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் எதிர்பாராத கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+