Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடந்த ஒரு வாரமாகவே.. அதிகரித்த தீவிரவாத நடவடிக்கைகள்! அதன் தொடர்ச்சிதான் டெல்லி சம்பவமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் இன்று மாலை பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. இதில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக டெல்லி குண்டுவெடிப்பு நடந்ததா? என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.

இன்று மாலை சரியாக 6:52 மணியளவில் செங்கோட்டைக்கு அருகே காரில் குண்டுவெடிப்பு நடந்தது என்று டெல்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்திருக்கிறார். குண்டுவெடிப்பின் சத்தம் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டது என்றும், செங்கோட்டை மெட்ரோ நிலையம் கேட் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாகவும், அதன் தீவிரம் அதிகமாக இருந்ததாகவும் டெல்லி தீயணைப்புத் துறையினர் கூறுகின்றனர்.

Delhi Bomb Blast

இந்த சம்பவம் கடந்த ஒருவாரமாக நடந்த தீவிரவாத செயல்களின் தொடர்ச்சியா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. அதாவது குஜராத் தீவிரவாத தடுப்பு காவல் படையினர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய மூன்று நபர்களை ஓரிரு நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் மருத்துவர்.

இவர்கள் ரிசின் என்ற மிகவும் கொடிய நச்சுப் பொருளை தயாரித்து, அதனைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் பேரழிவுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரேசின் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அதேபோல இன்று காலை, ஃபரிதாபாத்தில் ஒரு மருத்துவரின் வீட்டிலிருந்து சுமார் 2,900 கிலோ அளவிலான வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெய்ஷ்-இ-முகமது, அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய தீவிரவாத அமைப்புடன் இவர்கள் தொடர்பில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து இன்று மாலை டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாக நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியா என்கிற கோணத்தில் விசாரிக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+