Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டையே உலுக்கிய டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இன்று மாலை 6.52 மணியளவில் கார் ஒன்று திடீரென வெடித்தது. தொடர்ந்து அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. மேலும், அருகில் இருந்த சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

Delhi Bomb Blast mk stalin

இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளது. மேலும் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வெடிமருந்துகளை கண்டறியும் கருவிகளுடன் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான தகவல்களை ஒவ்வொரு நிமிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பகிர்ந்து வருகிறோம் என்று டெல்லி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி கார் குண்டுவெடிப்பில் உறவினர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகளுடன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேசன் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் மனதை நொறுங்கச் செய்கிறது. கவலையளிக்கிறது. அப்பாவி மக்கள் உயிரிழந்தது கவலையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் , உறவினர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பல அப்பாவி உயிர்களை பலிகொண்டதால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அங்கிருந்து வரும் காட்சிகள் மனதை உடைக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்

எடப்பாடி பழனிசாமி

டெல்லி செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவத்தில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பரிதாபாத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும், போலீசாரும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+