Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் பட பிரச்சனை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலை பாருங்க! அதிமுக பற்றியும் சுடச்சுட பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுக்கு அதிக சீட் கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தொகுதி எண்ணிக்கையைவிட யார் ஆட்சியில் இருக்கக் கூடாது, முதல்வராக யார் இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

அப்போது அன்புமணியுடன் கூட்டணி பேசியது தவறு என ராமதாஸ் சொன்ன கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என பதில் அளித்த நயினார் நாகேந்திரன், நாயகன் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் பிரதமர் மோடியை குறை கூற கூடாது. இதற்கு முன்பாக நிறைய படங்களுக்கு சென்சார் வழங்குவதற்கு தாமதம் ஆகியிருக்கிறது என்று கூறினார்.

Prime Minister Modi Shouldn t Be Blamed for Jananayagan Censor Delay Says Nainar Nagendran

டெல்லியில் அமித்ஷாவுடன் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்ற நிலையில் சந்திப்பின் போது தொகுதி பங்கீட்டு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு 9.30 மணியளவில் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

56 தொகுதிகள், 3 அமைச்சர்கள் பதவி

தமிழகத்தை பொருத்தவரைக்கும் தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் கூட்ட ணியில் பா.ஜ.க, பா.ம.க. சேர்ந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் சேர இருக்கின்றன. ஒரு வலுவான கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி எங்களுடைய கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்றார்.

இதற்கிடையே, அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன என்பது தொடர்பாக பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, 56 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர்கள் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா கூறியதாக சொல்லப்படுகிறது. அதாவது பாஜகவுக்கு தமிழக சட்டசபையில் போட்டியிட 56 தொகுதிகள் வேண்டும் என்றும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் 3 அமைச்சர்கள் பதவி கொடுக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தாரா அமித்ஷா

ஆனால் இதற்கு தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சியெல்லாம் செட் ஆகாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாராம். 25 முதல் 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என்று அதிமுக கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அதிமுக - பாஜக இடையே விரைவில் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்றும் சொல்லப்படுகிறது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வரும் 20 ஆம் தேதி சென்னை வந்த பிறகு கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது

அதிகார பகிர்வு என்ற கோரிக்கை முன்னெப்போதும் இல்லாதது என்பதால், பழனிசாமி இதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்கு பதிலாக, கட்சியினரிடம் கலந்து ஆலோசித்துதான் இது பற்றி முடிவு எடுக்க முடியும் என்று எடப்பாடி கூறியதாக சொல்லப்படுகிறது. கூட்டணி ஆட்சி என்றால் தேர்தல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்றும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி சூசகமாக கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

நயினார் நாகேந்திரன் விளக்கம்

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பாஜக கட்சி யாருக்கும் அழுத்தம் கொடுக்காது. அதிமுகவுக்கு அதிக சீட் கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை.. எங்களுக்கு தொகுதி எண்ணிக்கையைவிட யார் ஆட்சியில் இருக்கக் கூடாது, முதல்வராக யார் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். என்று கூறினார்.

ஜனநாயகன் பட சென்சார் விவகாரம்

அப்போது ஜனநாயகன் பட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் நேரடியாக பிரதமரை தொடர்பு படுத்தக் கூடாது. அது தணிக்கை சான்று கொடுப்பவர்கள் தான் முடிவு செய்வார்கள். ஒரு சில படங்களுக்கு சென்சார் சான்று வழங்க கூடுதல் நாட்கள் ஆகியுள்ளன. எனவே நேரடியாக இதில் பிரதமர் மோடியை குறை கூற கூடாது.

ஓபிஎஸ் பற்றி கேள்வி

தொடர்ந்து அன்புமணியுடன் கூட்டணி பேசியது தவறு என ராமதாஸ் சொல்லியிருந்தாரே என்ற கேள்விக்கு, "இந்த கேள்விக்கு இப்போது பதில் கூற இயலாது.." என்றார். மேலும் ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இணைக்க மாட்டோம் என எடப்பாடி கூறியதற்கு பதில் அளித்த நயினார், "இந்த விவகாரத்தில் நான் எப்படி பதில் சொல்ல முடியும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+