Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உபி வாக்காளர்களை கூட்டி வந்து ஹரியானாவில் ஆட்சியை திருடிவிட்டனர்- ராகுல் காந்தி பரபரப்பு பிரஸ் மீட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளை பீகாரில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைப் போல ஹரியானாவிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், உத்தரப் பிரதேச வாக்காளர்கள் ஹரியானாவில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் ஆட்சி திருடப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகிறார். முதலில் கர்நாடகத் தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், பிறகு அவர் தொடர்ச்சியாக இது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதற்கிடையே பீகாரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி இன்று டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Rahul Gandhi Congress

ராகுல் காந்தி

அங்கு அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஹரியானா தேர்தலில் முறைகேடு நடந்ததாலேயே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை என்று ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். உ.பி.யிலிருந்து பலரை ஹரியானா அழைத்து வந்து ஓட்டுப் போட்டு ஆட்சியைத் திருடியதாக பாஜக மீது ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்ததற்கு 100% ஆதாரம் தங்களிடம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாக்கு திருட்டு

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் 'ஜென் Z' தலைமுறையினர் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.. ஏனெனில் இது அவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.. இது எங்களுக்கு உறுதியாகத் தெரியும்.. உத்தரப் பிரதேச வாக்காளர்கள் கூட்டி வந்து ஹரியானாவில் வாக்களித்து.. அதன் மூலம் ஆட்சியைத் திருடிவிட்டனர்" என்றார்.

தேசியளவில் வாக்கு திருட்டு

ராகுல் காந்தி இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பேசுகையில், "ஹரியானா மாநிலத்தில் எப்படி வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்பது இந்த "H" பைல்ஸில் உள்ளன. இந்த வாக்கு திருட்டு ஏதோ ஒரு குறிப்பிட்ட தொகுதிகளில் நடக்கவில்லை.. மாநில முழுக்க.. தேசிய அளவில் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஹரியானாவில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களிடமிருந்து பல புகார்கள் வந்தன. சில விஷயங்கள் தவறாக இருப்பதாகவும், எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. அங்கு அனைத்துத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றே காட்டின. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டன. இதனால் ஹரியானாவில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

முரண்பாடு

ஹரியானா தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, தபால் வாக்குகள் மற்றும் எண்ணப்பட்டு வாக்குகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. இது நிஜமாகவே எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது ஹரியானாவில் இதற்கு முன் எப்போதும் நடந்தது இல்லை. இதன் காரணமாகவே தீவிரமாக அந்தத் தகவல்களை ஆய்வு செய்தோம். பல முறை செக் செய்த பிறகே இந்தத் தகவல்களை வெளியிடுகிறோம்" என்றார்.

மேலும், ஹரியானாவில் வாக்களித்த ஒவ்வொரு எட்டு வாக்குகளுக்கும் ஒரு வாக்கு போலி வாக்கு என்றும் குற்றஞ்சாட்டினார். தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு உதவ வேண்டும் என்பதாலேயே போலி வாக்காளர்களை நீக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+