Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபை தேர்தல்: காஷ்மீரில் பி.டி.பி 23; பா.ஜ.க. 22; என்.சி. 13; காங். 8 தொகுதிகளில் வெற்றி!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 28 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களில் வென்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 87 சட்டசபை தொகுதிகளுக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 831 பேர் வேட்பாளர்களாக களத்தில் நின்றனர். ஜம்மு காஷ்மீரில் நான்கு முனைப் போட்டி நிலவியது.

மக்கள் ஜனநாயகக் கூட்டணி, தேசியமாநாடு, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. இம் மாநில தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் 47.11 லட்சம் வாக்குகள் பதிவாகின.

All Set for Counting of Votes in Jammu and Kashmir, Jharkhand

தீவிரவாதிகளின் மிரட்டல், எச்சரிக்கை, தாக்குதல்களுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 5 கட்டமாக பதிவான வாக்குகளையும் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் 28 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியே அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), பாஜகவுக்கு இணையான தொகுதிகளிலும் சில நேரங்களில் கூடுதல் தொகுதிகளிலும் முன்னணி வகித்தது.

தற்போது அனைத்து தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட முடிவுகள்:

மக்கள் ஜனநாயக கட்சி - 28

பாரதிய ஜனதா கட்சி - 25

தேசிய மாநாட்டு கட்சி - 15

காங்கிரஸ் கட்சி -12

மக்கள் மாநாட்டு கட்சி - 2

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக முன்னணி (மதச்சார்பின்மை) - 1

மார்க்சிஸ்ட் கட்சி -1

சுயேட்சைகள் -3

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+