For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹரியானாவில் பல ஆண்டு கால காங். ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக

By Siva
Google Oneindia Tamil News

சன்டிகர்: ஹரியானாவில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Assembly polls: Haryana may see end of decade-long Congress rule

தேர்தல் கருத்துக்கணிப்புகளின்படி ஹரியானாவில் பல ஆண்டுகாலம் நடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய தேசிய லோக் தள தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

இந்த தேர்தலில் தங்கள் கட்சி 40 இடங்களில் வெற்றி பெறும் என்று துஷ்யந்த் தெரிவித்தார். ஆனால் அந்த கட்சி வெறும் 19 இடங்களையே கைப்பற்றியுள்ளது.

English summary
Today is BJP's day as it has sent congress home by winning 45 out of 90 seats in Haryana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X