கடைசியில் ராகுல் போனது பஞ்சரான சைக்கிள்தானப்பா... பாஜக சொன்னது பலிச்சிருச்சே!
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதியுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் அவர் பஞ்சரான சைக்கிளில் பயணிக்கிறார் என்று பாஜக தலைவர்கள் கிண்டல் செய்தனர்.
டெல்லி: தந்தையோ விமானத்தில் பயணம் செய்தார்... ஆனால் அவரது மகனோ சைக்கிளில் அதுவும் பஞ்சரான சைக்கிளில் பயணம் செய்கிறார் என்று பாஜக தலைவர்கள் நக்கலடித்தது தற்போது உண்மையாகிவிட்டது.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
மிகவும் அதிக தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்குக்கும், மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பூசலில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் அகிலேஷ் யாதவ் சைக்கிள் சின்னத்தை திரும்ப பெற்றார்.

கூட்டணி
பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் காங்கிரஸும், சமாஜவாதியும் கூட்டணி அமைத்தன. இருவரும் பணமதிப்பு இழப்பு விவகாரம், ராமர் கோயில் விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து பிரசாரம் செய்தனர்.

பாஜக கிண்டல்
அப்போது பாஜக மூத்த தலைவர் சாத்வி நிரஞ்சன், தந்தையோ (ராஜீவ் காந்தி) விமானத்தில் பறந்தார். ஆனால் அவரது மகனோ சைக்கிளின் காரியரில் உட்கார்ந்து பயணிக்கிறார் என்று கிண்டலடித்தார்.

அமித் ஷா
அதன்பின்னர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவோ, ராகுல் சைக்கிள் காரியரில் உட்கார்ந்து கொண்டு பயணித்தது அல்லாமல் பஞ்சரான சைக்கிளில் பயணம் செலவதால் அவர் விரும்பும் இட்த்தை அடைவாரா என்பது சந்தேகமே என்று கூறியிருந்தார்.

எனக்கு சவால்
உ.பி.மாநிலம், மிர்ஸாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரதக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த பகுதியில் மின்சாரம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய மின் கம்பியைத் தொட்டு பாருங்கள் என்று அகிலேஷ் யாதவ் எனக்கு சவால் விடுத்தார்.

மின்சாரம் இல்லை
மின்சாரம் இல்லாததால் மின் கம்பியைத் தொட கவலைப்படத் தேவையில்லை என்று ராகுல் காந்தி, குலாம் நபி ஆஸாதிடம் கூறியுள்ளார். இந்த மாநிலத்தில் மின்சாரம் இல்லாததை அகிலேஷின் புதிய நண்பர் ராகுலே ஒப்புக் கொண்டதால் நான் வேறு மின்கம்பியைத் தொட்டு பார்க்க வேண்டுமா?

ஷாக் அடிக்கும் எனக்கல்ல.. உங்களுக்கு...
சமாஜவாதி கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் வரும் 11-ஆம் தேதி (தேர்தல் முடிவுகள்) ஷாக் அடிக்கும் என்று மோடி தெரிவித்திருந்தார். தற்போது இரு தரப்பினர் மீதும் டிரான்ஸ்பார்மரே பாய்ந்தது போன்ற அதிர்ச்சியில் உள்ளனர்.

படுதோல்வி
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளில் பாஜக 314 இடங்களில் வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இதை பார்க்கும்போது பாஜக தலைவர்கள் ராகுலை எச்சரித்தது எந்த அளவுக்கு உண்மையாகியுள்ளது என்பது இப்போது தெரிகிறது.
-
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
எல்லாம் ஓவர்.. நெருங்கும் கிளைமேக்ஸ்.. பாஜக தலைமை மேஜர் முடிவு.. இன்று வெளியாகும் வேட்பாளர் பட்டியல் -
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்












Click it and Unblock the Notifications