Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாம் ஓவர்.. நெருங்கும் கிளைமேக்ஸ்.. பாஜக தலைமை மேஜர் முடிவு.. இன்று வெளியாகும் வேட்பாளர் பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பாஜக இந்த முறை 27 தொகுதிகளில் போட்டியிடும் சூழலில் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நிலவி வந்ததாகக் கூறப்பட்டது. இதற்கிடையே இன்றைய தினம் அனைத்தும் முடிந்து பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடும் எனச் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. அனைத்து கட்சிகளுமே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்த முறை தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக போட்டியிடுகிறது. ஓராண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், இரு கட்சிகளும் இணைந்தே செயல்பட்டுவருகிறது.

BJP candidate list

அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுகிறது. ஒரே தொகுதியில் போட்டியிடப் பல முக்கிய நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதால், வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலவுகிறது. சமூக ரீதியான வாக்குகளைப் பெறவும் யாரை நிறுத்த வேண்டும் என்பதையும் பாஜக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழகம் மற்றும் மேற்கு மண்டலங்களில் குழப்பம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாகவே வேட்பாளர் தேர்வு தொடர்பாகவே ஆலோசனைகள் நடந்து வருகிறது. மாநில தலைவர்கள் உடன் பியூஷ் கோயல் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இருப்பினும், வேட்பாளர் தேர்வில் இழுபறியே நிலவுகிறது. இதன் காரணமாகவே அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, நாளை நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் பிரச்சார கூட்டத்தையும் கூட ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே வேட்பாளர்கள் தேர்வு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், இன்று அவை லாக் செய்யப்படும் எனத் தெரிகிறது. தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளைய தினம் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனச் சொல்லப்படுகிறது. இன்றும் ஞாயிற்றுக்கிழமையும் அரசு விடுமுறை நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. எனவே, நாளை மற்றும் திங்கள் என வேட்புமனு தாக்கல் செய்ய இரு நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் இன்று மாலை பாஜக வேட்பாளர்களை இறுதி செய்யும் எனத் தெரிகிறது.

அதைத் தொடர்ந்து இன்று மாலையே வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது. டெல்லி மேலிடத்திற்கு இது தொடர்பான டாக்குமெண்டுகள் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறை என்டிஏ கூட்டணியில் உள்ள இதர சிறிய கட்சிகளும் கூட பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகிறது. ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+